Saturday, May 14, 2011

மரித்த நீலத்திரை – எக்ஸ்பி – சரி செய்ய முயலுங்கள்

வணக்கம் நண்பர்களே .
                                                    
 
     விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திரை’ என்று தமிழ்ப் படுத்தலாம் .
இந்த கட்டுரை , மரித்த நீலத்திரையில் சில வகை வாசகங்கள் தோன்றினால் , அந்த எரர்களை சரி செய்யும் வழிமுறைகளை பற்றியது .
முதலில் உங்களிடம் எக்ஸ்பி சிடி இருக்க வேண்டும் . இந்த கட்டுரை , உங்கள் டிரைவுகள் ‘என் டி எப் எஸ்’ ரக பார்மேட்டை கொண்டிருக்கும் என்ற தோரனையில் எழுதப்பட்டது . உங்களுடையது பேட் 32 ரகமாக இருப்பின் , சில வழிமுறைகள் மிச்சமாகும்.
முதலில் உங்கள் எரர் கீழ்கண்ட சொற்களை உடையதாக இருப்பின் , இந்த வழிமுறை கண்டிப்பாக வேலை செய்யும் . ஒரு வேலை எரர் மெஸேஜை படிக்க முடியாமல் வேகமாக ரீஸ்டார்ட் ஆனாலும் நீங்கள் இவ்வழிமுறையை முயற்சித்து பார்க்கலாம் .

Windows XP could not start because the following file is
missing or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM


Windows XP could not start because the following file is missing
or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE

Stop: c0000218 {Registry File Failure} The registry cannot load the hive
(file): \SystemRoot\System32\Config\SOFTWARE or its log or alternate
System error: Lsass.exe
When trying to update a password the
return status indicates that the value provided as the current password is not
correct.

இவைதானென்றில்லை , மேலும் சில வகை ரெஜிஸ்ட்ரி எரர்களுக்கும் இந்த முயற்சியை மேற்கொள்லலாம் . இனி ஆப்பரேசனுக்கு தயாராகுங்கள் .
முதற் பகுதி
 ரெக்கவரி கன்சோலுக்குள் செல்வது
   அதற்கு முதலில்
  •     கணினியை ரீஸ்டார்ட் செய்யுங்கள் . செய்யும்போது டெலீட் கீயை தட்டிக்கொண்டே இருங்கள் .
  •     இப்போது பையாஸ் மெனு வரும் . அதில் பூட் ஆப்சன்ஸ் சென்று பூட் டிவைஸ் பிரையாரிட்டியை முதலில் சிடியில் இருந்து பூட் செய்யுமாறு மாற்றி அமையுங்கள் .
  •     உங்கள் எக்ஸ்பி சிடியை சொருகி ரீஸ்டார்ட் செய்யுங்கள்
  •     உங்கள் “press any key to boot from cd …. ” என்று திரையில் வாசகம் தெரியும் . அப்போது ஏதாவது ஒரு கீயை தட்டி சிடியில் இருந்து பூட் செய்ய சொல்லுங்கள்
  •     கொஞ்ச நேரம் டிவைஸ் டிரைவர்கள் எல்லாம் லோட் ஆகும் .
  •     பிறகு உங்களிடம் புதிதாக விண்டோஸ் இன்ஸ்டால் செய்யவா அல்லது ரிப்பேர் செய்யவா என்று கேட்கும் . ‘ஆர்’ பட்டனை அழுத்தி ரிப்பேர் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும் .


நீங்கள் அனேகமாக ரெக்கவரி கண்சோலுக்குள் நுழைந்து விடுவீர்கள் .
பின்னர் உங்களின் எந்த இன்ஸ்டாலேசனை சரி செய்ய வேண்டுமோ அதற்குள் நுழையுங்கள் . பாஸ்வேர்டு கேட்கும் , கொடுங்கள் . பெரும்பாலான கணினிகளில் இது பிளாங்க் ஆக இருக்கும் .
பிறகு கீழ்கண்ட கமாண்டுகளை தேவையான ஸ்பேஸ் விட்டு , உள்ளது உள்ளபடி ,
தட்டுங்கள் . இதில் C:\ கோலன் என்பது உங்கள் இயங்குதளத்தின் ரூட் பாத் . அதாவெது நீங்கள் ‘ஐ’ டிரைவில் விண்டோசை நிறுவியிருந்தால் “c:\” பதில் “I:\” என்று மாற்றிதட்ட வேண்டும் .
md tmp
copy C:\windows\system32\config\system C:\windows\tmp\system.bak
copy C:\windows\system32\config\software C:\windows\tmp\software.bak
copy C:\windows\system32\config\sam C:\windows\tmp\sam.bak
copy C:\windows\system32\config\security C:\windows\tmp\security.bak
copy C:\windows\system32\config\default C:\windows\tmp\default.bak
delete C:\windows\system32\config\system
delete C:\windows\system32\config\software
delete C:\windows\system32\config\Sam
delete C:\windows\system32\config\security
delete C:\windows\system32\config\default
copy C:\windows\repair\system C:\windows\system32\config\system
copy C:\windows\repair\software C:\windows\system32\config\software
copy C:\windows\repair\sam C:\windows\system32\config\sam
copy C:\windows\repair\security C:\windows\system32\config\security
copy C:\windows\repair\default C:\windows\system32\config\default
ஒவ்வொரு வரியை டைப் செய்தவுடன் என்டர் கீயை தட்டவும் . இதில் எல்லா ‘காப்பி’ கமாண்டுகளும் “பைல் காப்பீட்” என்ற மெஸேஜை வெற்றிகரமாக எக்சிக்யூட் ஆனவுடன் தரும் . “டெலீட்” கமாண்டுகள் எந்த அடையாளமும் காட்டாமல் அடுத்த பிராம்ப்டுக்கு சென்றுவிடும் .
இப்போது EXIT என்று அடியுங்கள் . 
 
இது சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்யும் . உங்கள் சிடியை வெளியில் எடுக்க வேண்டாம் , பிறகு அதில் வேலையி்ருக்கிறது .
சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகும்போது மீண்டும் உங்களிடம் “பிரஸ் எனி கீ ” என்று கேட்கும் , எதையும் அழுத்தாமல் வேடிக்கை மட்டும் பாருங்கள் . உங்கள் சிஸ்டம் தற்பொழுது  பூட் ஆகி GUI  வரை செல்ல வேண்டும் . அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் யாராவது அனுபவசாலியை பக்கத்தில் வைத்து சரிசெய்யவும் , அல்லது சர்வீஸ் சென்டரை கூப்பிடவும்.
 
பகுதி இரண்டு எழுத கொஞ்சம் போரடிக்கிறது நண்பர்களே , கொஞ்ச நேரம் கழித்து அதை எழுதுகிறேன் . சரியா . தற்போதைக்கு உங்கள் கணினி வேலை செய்யும் நிலையை எட்டி யிருக்கும் . ஆனால் முழுமையாக இன்னும் உங்கள் பழைய செட்டிங்குகள் , சாப்ட்வேர்களை ரீஸ்டோர் செய்வதை அடுத்த பதிவில் காண்போம் . 

அடுத்த பதிவு வரும் வரை பொறுமை யில்லாதவர்கள்  கீழ்கண்ட ஆங்கில பக்கங்களை தயவு செய்து முழுவதுமாக படித்துவிட்டு வேலையை ஆரம்பிக்கவும் . இல்லையன்றால் பாதியில் மாட்டிக்கொள்ள நேரிடும் .
.
இரண்டாம் பாகத்தில் சந்திப்போம் .

1 comment:

  1. This guide is designed for the beginner. We will attempt to explain
    everything in layman’s terms, so there is no confusing material within. We
    want to have only simple and step by step guides that anyone can
    understand, and use in their home.

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : இராஜா