Saturday, August 18, 2012

நினைவக பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த மைக்ரோசாப்ட் வலைமனையில், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்படும் விதம் குறித்து செய்திகள் தரப்பட்டு வருகின்றன. 
அண்மையில், இந்த சிஸ்டத்தில் எப்படி கம்ப்யூட்டர் ஒன்றின் ராம் மெமரி நிர்வகிக்கப்படுகிறது என்பது விளக்கப் பட்டுள்ளது.

முதலாவதாக மெமரி கம்பைனிங் (memory combining) என்ற வழிமுறை செயல்படுகிறது. விண்டோஸ் சிஸ்டத்தில், ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராம் இயங்கும் போதும் ராம் நினைவகத்தில் இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மெமரி கம்பைனிங் செயல்பாடு, ராம் மெமரி இடத்தைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து, ஒரே அப்ளிகேஷன் புரோகிராம், ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் இயக்கத்திற்கு வந்து, அத்தனை முறை மெமரியைப் பயன்படுத்தி இருந்தால், அதனை விடுவிக்கிறது. இதன் மூலம் 10 முதல் 100 மெகா பைட் அளவில் மெமரி கிடைக்கும். 

விண்டோஸ் சிஸ்டம் தரும் சில சேவைகளுக்கான புரோகிராம்கள் இயங்க ராம் மெமரியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இத்தகைய 13 சேவை புரோகிராம்கள் இயங்குவது நிறுத்தப் பட்டுள்ளன. சில நாமாக இயக்கும்படி மாற்றப்பட்டுள்ளன. சில சேவை புரோகிராம்கள் “Start on Demand” என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக, விண்டோஸ் இயக்கத்தில் அதிகம் பயன்படுத்தப் படாமல் இயங்கும் சில புரோகிராம்கள், தனித்தனியாக இயங்குகையில் அதிக இடம் எடுத்துக் கொண்டன. இவற்றை ஒன்றாக்கிக் குறைந்த அளவில் ராம் மெமரியினை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

எந்த புரோகிராம்களுக்கு ஒதுக்கப்பட்ட மெமரியை வைத்துக் கொள்வது, எவற்றை நீக்குவது என்ற வழியை விண்டோஸ் 8 ஒரு புதிய வழிமுறை மூலம் மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பைல் ஒன்றைத் திறக்கையில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனைச் சோதனை செய்திட ராம் மெமரியில் இடம் எடுத்துச் செயல்படுகிறது. இதனை ஒருமுறை மேற்கொண்டால் போதும். எனவே அடுத்த முறை இந்த சோதனைக் கான ராம் மெமரி இடம் சேமிக்கப்பட்டு, இடம் தேவைப்படும் மற்ற புரோகிராம்களுக்குத் தரப்படுகிறது.

மேலே சொல்லப்பட்ட வழிமுறைகள் போல இன்னும் சிலவும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நிர்வாக நடைமுறைகளாக வர இருக்கின்றன. இவற்றின் இயக்கத்தால், 1 அல்லது 2 ஜிபி ராம் மெமரி இடம் கொண்ட கம்ப்யூட்டர் களில், ராம் மெமரி தேவையானதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு, கம்ப்யூட்டர் இயக்கத்தில் மந்த நிலை ஏற்படாது. ஏற்கனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்க குறைந்தது 404 எம்பி ராம் எடுத்துக் கொண்ட நிலையில், விண்டோஸ் 8 சிஸ்டம் 281 எம்பி மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எனவே ராம் மெமரி இடம் இல்லாததனால், அப்ளிகேஷன்கள் இயங்குவது தாமதமாகின்றன என்ற குறை இனி இருக்காது.

கம்ப்யூட்டர் கிராஷ் ஆவதற்கான காரணங்கள்

பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில்
Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death
என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

1. ஹார்ட்வேர் பிரச்னை: கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம் இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start Settings Control Panel System Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.

2. ராம் மெமரி சிப்ஸ்: ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக் கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம். 

3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்: பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.

4. வீடியோ கார்ட்: சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளே யின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start Settings Control Panel Display Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.

5. வைரஸ்: பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். 

6. பிரிண்டர்: பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக் கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும். 

7. சாப்ட்வேர்: முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர் பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரி யைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப் பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

8. அதிக வெப்பம்: இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப் பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கு வகையில், சிபியு செட் செய்யப் பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

9. மின் ஓட்டம்: கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கலாம்.

விண்டோஸ் 7 ட்யூனிங்


நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி யிலிருந்து, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியுள்ளீர் களா! இந்த புதிய சிஸ்டத்தில் கிடைக்கும் சில ட்ரிக்ஸ்களை அறியாமல் இருப்பீர்கள். தெரிந்தாலும் அவற்றை எப்படி இயக்குவது எனத் தெரியாமல் இருப்பீர்கள். இங்கு சிலவற்றைப் பார்க்கலாம்.
ஐகான் மறைத்து பைல்களைப் பார்க்க:
டெஸ்க்டாப்பில் ஐகான்களை நீங்கள் அறிவீர்கள். விண்டோஸ் இயக்கத்தின் எந்த பதிப்பினை,
விண்டோஸ் 7 உட்பட, இன்ஸ்டால் செய்தாலும், உடனே, டெஸ்க்டாப்பில் ஐகான்கள் காட்சி அளிக்கும். விண்டோஸ் 7 இயக்கத்தில், இந்த ஐகான்களை மறைக்கவும், விருப்பப்படும் போது காட்டவும் ஏற்பாடு செய்திடலாம். இந்த ஐகான்களை மறைத்து வைப்பதன் மூலம், விண்டோஸ் வேகமாக அதன் இயக்கத்திற்கு வருகிறது. மேலும், மற்றவர்களும் நம் கம்ப்யூட்டர் இயக்கத்தைப் பயன்படுத்தும் சூழ்நிலை யில், அல்லது பார்க்கும் சூழ்நிலையில், இவற்றை மறைப்பது நமக்கு ஒரு பிரைவசியைக் கொடுக்கும். எனவே, இவற்றை எப்படி மறைப்பது எனப் பார்க்கலாமா!


டெஸ்க்டாப் ஐகான்களை மறைக்க:


டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் context மெனுவில் “View” என்பதன் மீது கிளிக் செய்திடவும். அடுத்து மெனுவில், இப்போது ஐகான்கள் காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்கான “Show desktop icon” முன்னால் உள்ள செக் மார்க்கினைத் தேர்ந்தெடுத்து நீக்கவும். இதில் “OK” என்பதில் கிளிக் செய்து புதிய மாற்றங்களை அமல்படுத்தவும். இதனை மேற்கொண்டவுடன், டெஸ்க்டாப் திரையிலிருந்து, டெஸ்க்டாப் ஐகான்கள் மறைந்துவிடும்.


ஐகான்கள் மறைந்த பின்னர் பைல் களைப் பார்க்க:


முக்கிய சொற்கள், கட்டளைகள் அல்லது புரோகிராம் பெயர்களை அமைக்க கூடிய டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். அதில் “Oணீஞுண” டெக்ஸ்ட் பீல்டில் “ஞீஞுண்டுtணிணீ” என டைப் செய்து “உணtஞுணூ” அழுத்தவும். டெக்ஸ் டாப், அடுத்து எக்ஸ்புளோரர் விண்டோவில் உள்ளவற்றுடன் திறக்கப்படும்.


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 இயங்கு வதைத் தடுக்க:


வெகு காலமாய் நாம் பயன்படுத்தி வரும் பிரவுசர் அப்ளிகேஷன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர். மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்தே இது தரப்படுகிறது. அதனாலேயே அதற்கு முன் இந்த பிரிவில் முதல் இடத்தில் இருந்த நெட்ஸ்கேப் கம்யூனிகேடர் என்னும் பிரவுசரைக் காலி செய்தது. ஆனால், இப்போது நாம் விரும்பும் வகையில், பயர்பாக்ஸ், கூகுள் குரோம், சபாரி எனப் பல பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. 
ஆனாலும், நாம் விண்டோஸ் சிஸ்டம் பதிகையில், நாம் கேட்காமலேயே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரும் நமக்கு இன்ஸ்டால் செய்யப்படுகிறது. வேறு பிரவுசரை நாம் பயன் படுத்தினாலும், இதுவும் இயக்கத்தில் இருக்கிறது. இதனை இயங்காமல் நிறுத்தி வைக்கும் வழியினை இங்கு பார்க்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். கீழ்க்காணும் செட்டிங்ஸ் வழிகளைப் பின்பற்றி இதனை மேற்கொள்ளலாம்.


Start மெனு திறந்து, All Programs என்ற பிரிவில் இருந்து Control Panel தேர்ந்தெடுக்கவும். இங்கு தரப்பட்டுள்ள “View By” என்ற கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும். இதில் category என்பதற்குப் பதிலாக, சிறிய அல்லது பெரிய ஐகான் (small or large icons) என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். 
இப்போது கண்ட்ரோல் பேனலில் இருந்து “Programs and Features” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் இடது பக்கம் உள்ளவற்றில் “Turn Windows features on or off” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 
இனி Windows Features திரை காட்டப்படும். இதில் நாம் இயக்கத்தில் வைக்கவும், மூடவும் என்ற ஆப்ஷனோடு, பல வசதிகள் (features) காட்டப்படும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8ஐ இயங்கவிடாமல் செய்திட, “Internet Explorer 8” என்பதன் முன்னால் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இதன் பின்னர் “OK” கிளிக் செய்திடவும். 


நீங்கள் மேற்கொள்ளும் இந்த ஏற்பாடு, மற்ற சில இயக்கத்தையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கை செய்தியுடன் விண்டோ ஒன்று காட்டப்படும். தொடர்வதற்கு “OK” என்பதில் கிளிக் செய்திடவும். 
உடன் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். அதற்கான செயல் கட்டம் (Progress bar) ஒன்று நீளமாகக் காட்டப் படும். இந்த செயல்பாடு முடிந்தவுடன், “Restart Now” என்னும் பட்டனில் கிளிக் செய்தால், உடன் விண்டோஸ் ரீ ஸ்டார்ட் செய்யப்படும். 


ரீஸ்டார்ட் செய்யப்பட்டுக் காட்டப் படும் விண்டோஸ் சிஸ்டத்தில் இன்டர் நெட் எக்ஸ்புளோரர் 8 இனி கிடைக்காது. பிரவுசர் ஒன்றுடன் நீங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள எந்த ஒரு வசதியும், இனி இதன் இடத்தில் நீங்கள் பயன் படுத்தும் பிரவுசருடன் கிடைக்கும். இதிலும் நீங்கள் மாற்றங்களை மேற்கொள்ளலாம். 


ஸ்டார்ட் மெனுவில் மை டாகுமெண்ட்ஸ்:


விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், நாம் எந்த பைலை உருவாக்கினாலும் அது மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யப்படும். எந்த புரோகிராமினை டவுண்லோட் செய்தாலும், அது மை டாகுமெண்ட்ஸ் போல்டரின் துணை போல்டரான மை டவுண்லோட்ஸ் என்ற போல்டரில் சேவ் செய்யப்படும்.


எனவே எந்த ஒரு பைலை இயக்கத்தில் கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்தாலும், நாம் மை டாகுமெண்ட்ஸ் போல்டரை அடிக்கடி திறந்து பயன் படுத்த வேண்டும். எனவே இதற்கான ஷார்ட் கட் ஒன்றை ஸ்டார்ட் மெனுவில் வைத்து விட்டால், இதனைத் திறப்பது எளிதாக இருக்குமே. அல்லது இதே மெனுவில் இதற்கென ஒரு பட்டனை அமைக்கலாம். அல்லது அந்த போல்டரையே ஒரு மெனுவாக அமைக்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.


Start மெனுவில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், “Properties” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 


ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும். இதில் “Customize” பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். இனி advanced setting என்ற விண்டோ திறக்கப்படும். இங்கு ஸ்டார்ட் மெனுவில் உள்ள போல்டர்களின் பட்டியல் ஒன்று காட்டப்படும். ‘Documents” என்பதன் கீழாக உள்ள “Display as a menu” என்பதனைத் தேர்ந்தெடுத்தால், ஸ்டார்ட் மெனுவில் டாகுமெண்ட் போல்டர் காட்டப்படும். இதன் துணை மெனுக்களையும் நாம் கிளிக் செய்து பைல்களைப் பார்க்கும் வகையில் இது அமைக்கப்படும். 


மாறாக, முதல் ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம். அப்போது ஸ்டார்ட் மெனுவில், Document பட்டன் மட்டும் காட்டப்படும். இந்த பட்டனில் கிளிக் செய்கையில், டாகுமெண்ட் போல்டர், விண்டோஸ் எக்ஸ்புளோரரில் திறக்கப் படும். உங்கள் விருப்பப்படி ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து மேற்கொண்ட பின்னர், “OK” பட்டன் மீது கிளிக் செய்திடவும். நீங்கள் மேற்கொண்ட மாற்றங்கள் விண்டோஸ்7 ஸ்டார்ட் மெனுவில் மேற்கொள்ளப்படும்.


இனி, ஸ்டார்ட் மெனுவினைத் திறந்து, Document என்பதில் கிளிக் செய்தால், அந்த போல்டரின் உள்ளே, அனைத்து பைல்கள், போல்டர்கள் மற்றும் டாகுமெண்ட்ஸ் என அனைத்தையும் நீங்கள் காணலாம். அ

வைரஸ் வகைகள்


1.ADWARE: கம்ப்யூட்டர் பயன் படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே, பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத் தேடல்கள் குறித்த தகவல்களை அறிய இந்த புரோகிராம்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் விருப்பங்களை அறிந்து கொண்டு, விளம்பரங்களைத் தரும். இந்த தொல்லை மட்டுமின்றி, நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டினையும், நமக்குத் தேவை எதுவும் இன்றி எடுத்துக் கொள்ளும். Trackng cookies  என்பவையும் இதில் சேரும்.
2. BACKDOOR SANTA: இணையத்தில் கிடைக்கும் புரோகிராமின் பயன்களை விரும்பி, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவீர்கள். அப்போது அதே புரோகிராம், உங்களை அறியாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு, நீங்கள் செல்லும் இணைய தளங்கள், நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.  Alexa   மற்றும்  Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே. உங்களுடைய பிரவுசரின் டூல்பாரில், நீங்கள் எதிர்பார்க்காமல், இந்த டூல்பார்களில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தால், பேக் டோர் சாண்டா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதாகப் பொருள். உடனே Add/Remove Programs  சென்று அதனை நீக்கவும்.


3. BHO: இதனை விரித்தால்  Browser Helper Object  என்று கிடைக்கும். நீங்கள் உங்கள் பிரவுசரை விரித்தவுடன் இதுவும் இயங்கும். சில பி.எச்.ஓ.க்கள் நமக்கு உதவுபவை. ஆனால் சில புரோகிராம்கள், நம்மை இணையத்தில் திசை திருப்பி, பாலியல் தளங்களில் கொண்டு சென்றுவிடும். உங்கள் கம்ப்யூட்டரை இது ஹைஜாக் செய்துவிட்டால், கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்கும். சில ட்ரோஜன் வைரஸ்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வேலையை முடிக்கும்.


4.  BLENDED THREAT: கம்ப்யூட்டரில் அதிக பட்ச சேதம் விளைவிக்கும் தாக்குதல். வைரஸ் மற்றும் வோர்ம் இணைந்து செயல்படுவது போல இயங்கும். இது இமெயில் வழியே வைரஸை பரப்பும். இத்தகைய தாக்குதல் ஆகும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் புரோகிராமினை வேகமாகப் பரவிவிடும்.


5. BOTNETS: குழுவாக நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, ஹேக்கர்கள் கைப்பற்றியபின் இவ்வாறு அழைக் கின்றனர். ஹேக்கர்கள் இவற்றைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிப்பார்கள். அந்த நெட்வொர்க் ஒரு ரோபோ ("robot network") போலச் செயல்படும். இதனால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.


6.  BROWSER HIJACKER:  இந்த புரோகிராம், நாம் பிரவுசர் மூலம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த புரோகிராமினை அனுப்பியவரின் இணைய தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். மீண்டும் நாம் இயங்கிய தளங்களுக்கு வர முடியாது. அது மட்டுமின்றி, நம் பிரவுசர் செட்டிங்குகளையும் மாற்றிவிடும். நம் ஹோம் பக்கத்தை மாற்றிவிடும். நாமாக அதனை பழையபடி மாற்றினால், மீண்டும் அது செட் செய்திடும் தளத்தினை ஹோம் பேஜாக அமைத்துவிடும்.


7.  ADWARE COOKIES: பொதுவாக குக்கிகள் என்பவை, சில இணைய தளங்களால், நம் கம்ப்யூட்டரில் பதியப்படும் சிறிய பைல்கள். இவை உங்கள் கம்ப்யூட்டர் குறித்த தகவல்களை அந்த இணைய தளத்திற்கு அனுப்புவதற்காக பதியப்படுபவை. ஆனால் சில இணைய தளங்கள் Adware tracking cookies பதிந்துவிடுகின்றன. இவை நீங்கள் இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் விளம்பரங்களை அந்த தளங்கள் உங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும்.  Adware Cookies  எப்போதும் மோசமானவை என்று கருத முடியாது. ஆனால் நிச்சயம் இவை உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைச் சிறிது மந்தப்படுத்தும்.


8. DIALERS:  ஒருவகையான சிறிய சாப்ட்வேர் புரோகிராம். இது நம் அனுமதியின்றி, நம் மோடம் மூலமாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் சில இணைய தளங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். பாலியல் தளங்களுக்குத்தான் பெரும்பாலும் இவை தொடர்பு அளிக்கின்றன. தொலைபேசி வழியாக இன்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இதனால் தொல்லை ஏற்படும். இந்தியாவில் தொலைபேசி வழி இணைப்பு இருந்த போதும், இந்த வகை தொல்லை இருப்பதாகத் தகவல் இல்லை.


7. GRAYWARE: இது தனிப்பட்ட ஒரு தொல்லை தரும் வைரஸாகத் தெரியவில்லை. பொதுவாக தடை செய்யப்பட வேண்டிய, நம் பணியை நாசம் செய்யக் கூடிய சிறிய புரோகிராம்களை இந்த சொல் கொண்டு அழைக்கலாம். மேலே சொல்லப்பட்ட அட்வேர், டயலர்கள் போன்றவை இந்த பெயரில் அடங்கும்.


8. KEYLOGGERS: நாம் கம்ப்யூட்டர் கீ போர்டில் அழுத்தும் அனைத்து கீகளையும் அப்படியே அவை எந்த கீகள் என்று பதிந்து, இந்த புரோகிராமினைப் பதிந்தவர்களுக்குக் காட்டும். நம் குழந்தைகள் கம்ப்யூட்டரில் என்ன வகை சாப்ட்வேர்களை இயக்குகிறார்கள், எந்த தளங்களுக்குச் செல்கிறார்கள் என்று கண்டறிய, இதனை நாம் பயன்படுத்தலாம். நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த புரோகிராம்கள் பதியப்படுகின்றன. சில கீ லாக்கர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சில கட்டணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும்.


9. MALWARE: Malicious Software என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, கம்ப்யூட்டரில் இறங்கி, தீங்கு விளைவிக்கும் அனைத்து புரோகிராம்களும் இதில் அடக்கம்.


10. STALKING HORSE: இவை பிரபலமான புரோகிராம் களுடன் இணைந்து கம்ப்யூட்டரில் வந்து தங்கும். கூடுதல் வசதிக்காக இது உள்ளது என்று அறிவிக்கப்படும். ஆனால் நம் வேலைகளின் தன்மை குறித்து, புரோகிராம் தந்த நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பி, பின் விளம்பரங்களை அனுப்பி வைக்கும்.

புதிய பேஸ்புக் வைரஸ்

இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனம் ஒன்று, புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாகச் சென்ற வாரம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக் தளத்தில் தங்கள் அக்கவுண்ட்டினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கம்ப்யூட்டரை இது தாக்குகிறது. ஒரு இமேஜ் பைல் போல மெசேஜ் அனுப்பப்படுகிறது. உண்மையில் அது இமேஜ் அல்ல.

இதில் கிளிக் செய்தால், .scr என்ற துணைப் பெயருடன் கூடிய பைல் ஒன்று உள்ளது. இதில் கிளிக் செய்தவுடன் ZeuS crimeware என்ற வகை வைரஸ் ஒன்று உள்ளே நுழைகிறது. தற்போது இது Win32.HLLW.Autoruner.52856 மற்றும் Heure: Trojan.Win32.Generic ஆகிய வைரஸ்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் பேஸ்புக் தளத்தில் எந்த இமேஜ் பைலாக இருந்தாலும் அதில் கிளிக் செய்திடும் முன் ஒருமுறை யோசிக்கவும்.

Media Player Classic - ஹோம் தியேட்டர் மென்பொருள்


மீடியா பிளேயர் கிளாசிக் ஹோம் சினிமா விண்டோஸ் நிரலானது எளிமையான போர்டபிள் மீடியா பிளேயராக உள்ளது. இது விண்டோஸ் மீடியா பிளேயர் v6.4 போன்று உள்ளது, ஆனால் இது பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது. இதனை நீங்கள் மீடியா பிளேயர் கிளாசிக் ஹோம் தியேட்டராக பயன்படுத்தலாம். இது பயன்படுத்த மிகவும் எளிமையானது. இது இலவசமாகவும் கிடைக்கிறது.
ஆதரிக்கப்படும் வீடியோ, ஆடியோ மற்றும் பட கோப்பு வடிவங்கள்:
WAV, WMA, MP3, OGG, SND, AU, AIF, AIFC, AIFF, MIDI, MPEG, MPG, MP2, VOB, AC3, DTS, ASX, M3U, PLS, WAX, ASF, WM, WMA, WMV, AVI, CDA, JPEG, JPG, GIF, PNG, BMP, D2V, MP4, SWF, MOV, QT, FLV

அம்சங்கள்:
  • கிழித்து நீக்க விருப்பத்துக்கு ஆதரவு.
  • Windows Vista 64 பிட்கள் ஆதரவு,.
  • EVR ஆதரவு (மேம்பட்ட நிகழ்பட ரெண்டர்)
  • வசன வரிகளை ஆதரிக்கிறது.
  • டிவி ட்யூனர் நிறுவப்பட்டிருந்தால் தொலைக்காட்சி பின்னணி பதிவுக்கு ஆதரவு 
  • minidump உருவாக்குதல்.
  • OSD (ஸ்கிரீன் காட்சி )
  • PN31 ரிமோட் கண்ட்ரோல் ஆதரவு
  • மல்டிமானிட்டர் கட்டமைப்பு ஆதரவு
  • பிக்சல் மாற்ற நிழல் BT601 - BT701
  •  மொழிபெயர்ப்பு.
  • Android சாதனங்களுக்கு ரிமோட் கண்ட்ரோல்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:8.87MB

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்

தாங்கள் நல்லகாரியங்களிற்கு மற்றும் சாதகக குறிப்பு எழுத தினம் சோதிடர்களை நாடுபவர்களா? தங்கள் பணத்தினையும் நேரத்தினையும் மீதப்படுத்த இதோ சோதிடர் மென்பொருளிள் வந்துவிட்டார்.உங்களிற்கு தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம். தேவையானது தங்களின் பெயர் ,பிறந்த திகதி மற்றும் பிறந்த
நேரத்தினை சரியாகக் கொடுத்தோமாயின் எமது முழு சாதகக் குறிப்பு, கணிப்புக்கள் மற்றும் பிறந்ததில் இருந்து நடக்கப்போவது வரை அனைத்தையும் திகதிகளுடன் பெறலாம். புகழ் பெற்ற மலையாள சோதிடர்களின் உதவியுடன் இவ் மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.
சோதிட நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக ஓர் சிறந்த மென்பொருள் ஆகும். அனைத்தும் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றது. பிரின்ட் பண்னுவதற்கும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சரி ஒருக்க முயற்சி செய்து பாருங்களன்.
இவ் மென்பொருளை எவ்வாறு உபயோகிப்பது?

1.

கீழுள்ள டவுன்லோட் லிங்கில் மென்பொருளை பதிவறக்கிக் கொள்ளவும்.

2.

பின்னர் Unzip பண்ணிக் கொள்ளவும்.

3.

Folderஐ உங்களிற்கு தேவையான இடத்தில் Copy பண்ணி Paste பண்ணவும். இன்ரோல் பண்ணவேண்டிய அவசியமில்லை.

4.

பின்னர் கட்டாயமாக தாங்கள் செய்ய வேண்டியது. Down.ttf எனும் Font பிரிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனை copy பண்ணி Control panel சென்று Font Folderல் paste பண்ணவும். OR Right click DOWN.ttf – Click Install

5.

பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது Predict.exe என்பதை கிளிக் செய்து சாதகம் கணிக்கப்பட் வேண்டியவரின் விபரங்களை வழங்கிய பின் OK பண்ணினால் சரி. சாதக முழு விபரங்களும் கிடைக்கும்.

Download Astro

மின்னஞ்சல் செல்லும் வழியை அறிய வேண்டுமா!


கோடிக்கணக்கில் இமெயில் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் ஒழிய, செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய் பிரச்னைகள் இருந்தால் ஒழிய இவை என்றைக்கும் தங்கள் இலக்கைத் தவறவிட்டது இல்லை. பிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.
ஒரு இமெயில் முகவரியை முதலில் பார்ப்போம்.


எடுத்துக்காட்டாக அது name@domain.com என இருக்கட்டும். நீங்கள் இமெயில் கிளையண்ட் ஒன்றை இந்த முகவரிக்கு மெயில் அனுப்பப் பயன்படுத்துகிறீர்கள். அது அவுட்லுக் அல்லது தண்டர்பேர்ட் ஆக இருக்கலாம். இதனை மெயில்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தலாம். இதனை மெயில் யூசர் ஏஜென்ட் (Mail User Agent MUA) என அழைக்கின்றனர். மெயில்களை அனுப்ப இந்த மெயில் ஏஜென்ட்கள் சிம்பிள் மெயில் ட்ரான்ஸ்பர் புரோட்டோகால் (Simple Mail Transfer Protocol SMTP) என்னும் வழிமுறையைப் பின்பற்றுகின்றன. இந்த வழி முறையைப் பின்பற்றி இன்டர்நெட் வெப் மெயில் சர்வருக்கு அனுப்புகின்றன. இமெயில் அனுப்புபவர் நேரடியாக இணையத்தில் இயங்குகிற வெப் மெயில் வசதியை, யாஹூ, ஜிமெயில், விண்டோஸ் லைவ் போன்ற, பயன்படுத்தினால் இந்த MUA இடையில் வருவதில்லை. இன்டர் நெட்டில் இயங்கும் ஜிமெயில் போன்ற மெயில் சர்வர்கள் மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜென்ட் (MTA Mail Transfer Agent) என அழைக்கப்படுகின்றன.

ஒரு இமெயில் செய்தியின் To: பீல்டில் அனுப்பும் டொமைன் பெயரே இருந்தால் ஒரு எம்.டி.ஏ. லோக்கல் மெயில் பாக்ஸ்களில் (இமெயில் முகவரி உள்ள ஒவ்வொரு வருக்கும் அந்த முகவரியைத் தந்துள்ள இணைய சர்வரில் ஒரு மெயில் பாக்ஸ் ஒதுக்கப்பட்டிருக்கும்)முகவரிக்கான மெயில் பாக்ஸைத் தேடி அங்கே அந்த மெயில் சேர்க்கப்படுகிறது. ஒரு வி.எஸ்.என்.எல். பயனாளர் இன்னொரு வி.எஸ்.என்.எல். பயனாளருக்கு அனுப்பும் வேளையில் இதுவே நடைபெறுகிறது. இந்த மெயிலைப் பெறுபவரின் மெயில் டெலிவரி ஏஜென்ட் (Mail Delivery Agent MDA), (அது அவுட்லுக் அல்லது ஒரு சர்வராக இருக்கலாம்) இந்த மெயிலை போஸ்ட் ஆபீஸ் புரோட்டோகால் (Post Office Protocol POP3) அல்லது இன்டர்நெட் மெசேஜ் அக்செஸ் புரோட்டோகால் (Internet Message Access Protocol IMAP 4) என்னும் வழிமுறையின் மூலம் பெற்றுக் கொள்கிறது. பயன்படுத்தப்படும் வேளையில் இமெயில் செய்தியானது இமெயில் கிளையண்ட்டுக்கு அனுப்பப்படுகிறது. அதே நேரத்தில் அந்த சர்வரில் ஒரு காப்பி தக்கவைக்கப்படுகிறது. இது அந்த இமெயில் கிளையண்ட் செட்டிங்ஸ் பொறுத்தது. எடுத்துக்காட்டாக எனக்கு இமெயில் வசதி தருவது டாட்டாவின் டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமாக இருக்கலாம். எனக்கென ஒரு இமெயில் பெட்டி அதன் சர்வர் ஒன்றில் இருக்கும். என்னுடைய மெயில் பாக்ஸை நான் அந்த சர்வர் சென்று என் பெட்டியைத் திறந்து படித்துப் பார்த்து அங்கேயே பதிலும் அனுப்பி வைக்கலாம். அல்லது ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம், தண்டர்பேர்ட், இடோரா அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மூலம் அந்த மெயிலை என் கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம். அப்படி இறக்கிக் கொள்கையில் ஏற்கனவே நான் என் இமெயில் கிளையண்ட்டை செட் செய்தபடி அந்த மெசேஜ் சர்வரில் தக்க வைக்கலாம். அல்லது இவ்வாறு இறக்கிய பின்னர் அதனை நிரந்தரமாக அழித்து விடவும் செய்திடலாம்.
ஆனால் ஐமேப் 4 பயன்படுத்துகையில் மெயில் சர்வரில் எப்போதும் என் மெயிலின் காப்பி தக்கவைக்கப்படும். இது சிறிய நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படும். இதற்குப் பதிலாக டொமைன்கள் வெவ்வேறாக இருந்து, மெயில் அனுப்புப வரும் பெறுபவரும் ஜிமெயில் அல்லது ஹாட் மெயில் போன்ற சர்வீஸ்களைப் பயன்படுத்துபவராக இருந்தால் சற்று வேறுபாடான வழிமுறை பயன்படுகிறது. இந்த வகையில் ஒரு MUA அல்லது வெப் மெயில் லோக்கல் MTA ஐ தொடர்பு கொள்கிறது. இவை இன்டர்நெட் சர்வீஸ் வழங்குபவரால் அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இங்கே எஸ்.எம்.டி.பி. பயன் படுத்தப்படுகிறது. அதிகமான எண்ணிக்கையில் இமெயில்கள் கிடைக்கப்பெறுகையில் அங்கே ஒரு இமெயில் வரிசை அமைக்கப்படுகிறது. இன்டர்நெட்டில் ஒரு இமெயில் பயணிக்கையில் அது யாருக்காக எழுதப்பட்டதோ அவருடைய இமெயில் பெட்டிக்கு நேரடியாகச் செல்வது என்பது எப்போதாவது ஒரு முறை அதிசயமாகத்தான் நடைபெறும். அந்த மெயிலுக்கு மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜெண்ட் (MTA) கிடைப்பதைப் பொறுத்து பல வழிகளில் இது அனுப்பப்படுகிறது. மெயிலை ட்ரான்ஸ்பர் செய்திடும் இந்த MTA, இமெயில் மெசேஜின் தலைப்பில் உள்ள ஹெடர்களில் தரப்படும் தகவல்களைப் படித்து அருகில் இணைக்கப்படும் டொமைன் நேம் சர்வரிடம் இந்த மெயில் செல்வதற்கான வழியைக் கேட்கிறது. அப்படியே அடுத்தடுத்து பல MTA மூலம் ஒரு இமெயில் தன் பயணத்தை மேற்கொள்கிறது. கம்ப்யூட்டர் இங்கே ஐ.பி. முகவரியை மட்டுமே படித்து அறிந்து கொள்வதால் ஒரு இமெயில் முகவரியின் டொமைன் நேமை முதலில் படிக்கிறது. (இது முகவரியில் @ என்ற அடையாளத்தினை அடுத்து இடம் பெறுவது) அதன் டொமைன் நேம் சர்வரில் இதனைத் தேடுகிறது. அந்த குறிப்பிட்ட டொமைன் நேமிற்கான மெயில் எக்சேஞ்ச் ரெகார்டிற்கான (Mail Exchange MX) தேடலாக இது இருக்கும். இதற்கு முன்பாக டொமைன் நேம் அறிதல் முடிவு பெற்றிருக்க வேண்டும். பல டொமைன் நேம்களில் சில (com, net, org, edu, gov) மட்டுமே பெரிய அளவில் உள்ளவை. இந்த பட்டியலில் குறைந்தது 13 பெயர்கள் உள்ளன. 

எடுத்துக்காட்டாக இமெயிலைப் பெறுபவரின் முகவரி x@otherdomain.com என இருப்பதாக வைத்துக் கொள்வோம். டொமைன் நேம் சர்வரிடமிருந்து பெறப்படும் எம்.எக்ஸ் ரெகார்ட் பெரிய அளவில் இயங்கும் இத்தகைய சர்வர்களின் பட்டியலாகவே இருக்கும். இந்த மெயில் பலவகை எம்.எக்ஸ் சர்வர்களின் வழியாக அதற்கென உள்ள டொமைன் கிடைக்கும் வரை செயல்படுத்தப்படும். எம்.எக்ஸ் என்பவை மெயில்களைப் பெறும் MTAக்கு இன்னொரு பெயர். இந்த மெயில் இவ்வாறான செயல்பாட்டில் செல்லும்போது இறுதியில் அதற்கான சர்வரை அடைகிறது. பின் மெயிலுக்கு உரியவர் பயன்படுத்தும் MDA மூலம் அது அவரை அடைகிறது. அல்லது வெப் மெயில் மூலம் POP3 அல்லது IMAP4 வழிமுறை பயன்படுத்தப்பட்டு மெயில் படிக்கப்படுகிறது. 


ஸ்பேம் மற்றும் பயர்வால்
ஸ்பேம் (SPAM) என்பது தேவையற்ற நமக்கென எழுதப்படாத ஆனால் நம் முகவரிக்கு அனுப்பப்படும் ஒரு தீங்கு விளைவிக்கும் மெயில் கடிதமாகும். இமெயில் வசதியில் ஒட்டிக் கொண்டுள்ள மிகப் பெரிய தீங்கு இதுதான். ஒருவரின் இமெயில் இன்பாக்ஸில் இவை சென்று அதன் இடத்தைப் பிடித்துக் கொள்வதுடன் கம்ப்யூட்டருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க நாம் பயர்வால் (Firewall) பயன்படுத்துகிறோம். அல்லது ஆன்ட்டி வைரஸ் புரொகிராம் பயன்படுத்து கிறோம். இவற்றின் வழியாகத்தான் அனைத்து இமெயில்களும் கடந்து செல்ல வேண்டும். இவை இரண்டும் அனைத்து இமெயில்களையும் சோதனை செய்கின்றன. இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் அட்டாச்மென்ட் என்னும் பைல்களையும் சோதனை செய்கின்றன. சந்தேகப்படும் வகையில் ஏதேனும் மெயில் அல்லது அட்டாச்மெண்ட் இருந்தால் உடனே அதனை குவாரண்டைன் என்னும் பாதுகாப்பான இடத்தில் வைத்து அது யாருக்காக அனுப்பப்பட்டுள்ளதோ அவருக்கு தகவல் தெரிவிக்கின்றன. 


இமெயிலின் வடிவமைப்பும் பாதுகாப்பும்
இமெயில் ஒன்றின் கட்டமைப்பு MIME Multipurpose Internet mail Extensions என அழைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் முன்னால் மெயில்களில் ரோமன் எழுத்துக்களில் உருவான டெக்ஸ்ட் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தன. அதன் பின்னர், மற்றவற்றையும் எப்படி அனுப்பலாம் என்ற வரையறையை இந்த கட்டமைப்பு அமைத்தது. 
அனைத்து இமெயில் கடிதங்கள் செல்லும் வழிகளும் யாரும் குறுக்கே புகுந்து எடுத்துப் படிக்கக் கூடிய வழிகளாகத் திறந்த நிலையில் தான் உள்ளன. எனவே மிக மிக இரகசியமாக ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என எண்ணினால் அந்த செய்தியை ஒரு டிஜிட்டல் சிக்னேச்சர் மூலமாகவோ, என்கிரிப்ஷன், டிக்ரிப்ஷன் மூலமாகவோ பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். 


புஷ் மெயில்
ஹேண்ட் ஹெல்ட் எனப்படும் கைகளில் எடுத்துச் செல்லும் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் மொபைல் போன்களில் இந்த புஷ் மெயில்கள் கிடைக்கின்றன. இந்த வகையில் இன்டர்நெட் இணைப்பு எப்போதும் இயக்கப்பட்ட நிலை யிலேயே இருக்கும். அந்த சாதனத்தில் செட் செய்த வகையில் அந்த முகவரிக் கான இமெயில் சாதனத்தை சென்றடை யும். பெரும்பாலான இத்தகைய மெயில்களில் மெயில்களின் ஹெடர்கள் மட்டுமே பெறப்படுகின்றன. பின் இவற்றை இயக்கி முழு அஞ்சலையும் படிக்கலாம். இதனால் பேண்ட் வித் மிச்சம் பிடிக்கப்படுகிறது. புஷ்மெயில் பரிமாற்றத்திற்கு IMAP 4 பயன்படுத்தப்படுகிறது. பிளாக்பெரி தன்னுடைய சொந்த வழிமுறை ஒன்றை பயன் படுத்துகிறது.

வெப் ஹோஸ்டிங் என்றால் என்ன?


வெப் ஹோஸ்டிங் இந்த வார்த்தை பற்றி தெரியாதவர் யாரும் இணையத்தில் ஒரு தளத்தை சொந்தமாக வைத்திருக்க இயலாது. அப்படி என்றால் என்ன? என்ன செய்கிறது வெப் ஹோஸ்டிங்? என்ன வசதிகள் உள்ளன? எல்லாம் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு. ஏதோ என்னால் முடிந்த அளவு தருகிறேன்.  Web Hosting என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தன்னைப் பற்றியோ, தன் நிறுவனத்தைப் பற்றியோ இந்த உலகுக்கு இணையத்தின் மூலம் சொல்ல இது உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் இதை வழங்கும்.
இது இலவசமாக கூட கிடைக்கிறது.  


இங்கு நான் வெப் ஹோஸ்டிங் என்பதை வெப் சைட் என்று குறிப்பிடுவேன்.


நீங்கள் கேட்கலாம் ப்ளாக் என்றால் என்ன என்று? அதாவது வலைப்பூ என்பது உங்களைப் பற்றி நீங்கள் எழுதும் டைரி போன்றது. ஆனால் வெப் சைட் என்பது ஒரு புத்தகம் எழுதுவது எனக் கொள்ளலாம். இரண்டிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. 


பெரும்பாலும் ப்ளாக் எல்லாம் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். பல மாற்றங்கள் செய்ய இயலாது. ஆனால் வெப் சைட் ஆனது ஒரு ப்ளாக் என்பதை விட மிக அதிக வசதிகளை கொண்டது. இதில் பல மாற்றங்கள் நாம் செய்யலாம். தள வடிவமைப்பு என்பது மட்டும் அல்ல, பல்வேறு வசதிகள். 


ஒவ்வொரு வெப் சைட்டும் ஒரு ப்ளாக் கொண்டிருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு நிறுவனம் வைத்து உள்ளீர்கள் என்றால், அந்த வெப் சைட் மூலம் உங்கள் நிறுவனம் பற்றிய செய்திகளை சொல்ல வேண்டும். நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி சொல்வது ப்ளாக். உதாரணம், ஒரு தொலைகாட்சி நிறுவனம் தன்னுடைய நிறுவனம் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி அதன் தளத்தில் சொல்லி இருக்கும், அதே ஒரு நிகழ்ச்சி ஒரு புதிய வசதி மூலம் உங்களுக்கு கிடைக்கும் என்றால் அதைப் பற்றி சொல்வதற்கு அதன் ப்ளாக் பயன்படுத்தும். 


ஆனால் இன்று வெறும் சொந்த டொமைன் வைத்து எழுதினாலே அது வெப்சைட் என்று சொல்லும் வண்ணம் ஆகிவிட்டது. 


இதுவரை வெறும் வெப் சைட் என்றால் என்ன என்று மட்டுமே சொல்லி உள்ளேன். சரி வெப் ஹோஸ்டிங் என்றால் என்ன?




நாம் நம் கணினியில் நமது தகவல்களை சேமித்து வைப்பது போன்றதுதான் இது. ஆனால் இதன் அளவு மிக மிக அதிகம். 


அதாவது நாம் எழுதும் உங்கள் வலைப்பூ தகவல்கள் எல்லாம் கூகுள் தனது சொந்த சர்வர் மூலம் சேமித்து வருகிறது. இது இலவசம். இதே வசதியை நாம் நம் சொந்த செலவில் சேமித்துக் கொள்வது தான் வெப் ஹோஸ்டிங். இதற்கு மாதம் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு செலவு ஆகும். செலவை பொறுத்து இடவசதி கிடைக்கும். இங்கு இடவசதி என்பது MB,GB என்பதில் குறிப்பிடப்படும். 


இதில் நமது தளத்தில் நாம் போஸ்ட் செய்யுபவை ஒரு குறிப்பிட்ட வெப் ஹோஸ்டிங் சர்வீஸ் மூலம் ஒரு சர்வர் கொண்டு சேமிக்கப்படும். 


பல்வேறு வகையான ஹோஸ்டிங் வசதிகள் உள்ளன. இலவசம், ஷேர்டு வெப் ஹோஸ்ட், சொந்த ஹோஸ்டிங்,  இன்னும் பல. ஆனால் இதில் ஷேர்டு ஹோஸ்டிங் தான் அதிகம் பயன்படுத்தப்படுவது. இவை வெப் ஹோஸ்ட் தளங்கள் மூலம் நமக்கு கிடைக்கும். 


வசதிகள் மட்டும் அல்ல வகைகளும் உள்ளன இதில் இமேஜ் ஹோஸ்டிங், வீடியோ ஹோஸ்டிங், பைல் ஹோஸ்டிங், ப்ளாக் ஹோஸ்டிங், ஈமெயில் ஹோஸ்டிங், ஷாப்பிங் கார்டு சாப்ட்வேர். 


ஒரு தளத்தை ஹோஸ்ட் க்கு மாற்ற வேண்டும் என்று நீங்கள் என்னும் போது பல விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். Bandwidth, Disk Space, DataBase, Number Of Domains, Site Creation Tools, Programming Language, SEO Service .இவைதான் அந்த விஷயங்கள்.

இணையதளத்திற்கு சிறுவர்கள் அடிமையா? உளவியல் நிபுணர் எச்சரிக்கை


14 வயது முதல் 24 வயது வரை உள்ள சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இணையதளத்திற்கு அடிமையாவதை பெற்றொர்கள் எச்சரிக்கையுடன் அணுகவேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனி பெடரல் சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின் படி 14 முதல் 24 வயதுள்ளோர் வரை இணையதளத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.



இதில் 2.4% முற்று முழுதான இணையதள அடிமைகள், 13.6% பிரச்சனை பயனாளர்கள் என்று வகைப்படுக்தியுள்ளனர்.


ஜெர்மனியின் மெய்ன்ஸ் பல்கலைக் கழகத்தின் சூதாட்ட அடிமைகள் புற நொயாளிகள் பிரிவில் பணியாற்றும் இயக்குனர் கிளாஸ் வுல்ஃபிளிங் என்பவர் இதனை தெரிவித்துள்ளார்.


'பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இணையதள அடிமைகளாகி தனிமைப்பட்டுப் போய் விட அனுமதிக்கக் கூடாது. பெற்றொர்கள் குழந்தைகளிடத்தில் இதுபோண்ற அறிகுறிகளைக் கண்டவுடன் அவர்களிடம் பேசி நயமாக வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்கிறார் இவர்.


குறிப்பாக ஆந்லைன் கணினி விளையாட்டுக்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவது பெருத்துள்ளது என்று இவர் கூறுகிறார். கணினி விளையாட்டுக்களில் ஒரு பிரச்சனையை தீர்ப்பது என்கிற வகையில் ஆட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் இயல்பிலேயே அதன் பக்கம் சென்று விடுகின்றனர்.


இது தவிர சோசியல் நெட்வொர்க், அரட்டைகளுக்கு அடிமையாவதும் அதிகத்துள்ளது. அதாவது எதார்த்த வாழ்க்கையில் அல்லது நிஜமான உலக வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்காத தனி அடையாளம் இதில் கிடைப்பதாக இவர்கள் உணர்வதே அடிமைக்கு இட்டுச் செல்கிறது.


இணையதளத்தில் நண்பர்களை அடைகின்றனர். எப்போதும் அவர்கள் இணையத்தில் இருப்பதால் தனிமை இல்லை. ஆனால் உண்மையான சமூகத்திலிருந்து அன்னியப்பட்டு விடுகின்றனர் என்கிறார் இந்த ஜெர்மானிய உளவியல் நிபுணர்.


இதனை வலுக்கட்டாயமாக தடுக்க நினைத்தால் கடுமையான உளவியல் சிக்களுக்கு இவர்கள் ஆளாகின்றனர். தூக்கமின்மை உள்ளிட்ட பிற மன நோய்களும் ஏற்படுகிறது என்கிறார்.


அடிமையாகாமல் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் ஒருநாளைக்கு 3 மணிநேரம் இணையத்தில் இருக்கிறார்கள் என்றால் அடிமைகள் 8 மணி நேரத்திற்கும் கூடுதலாக அதில் புழங்குகின்றனர்.


இணையதளத்தை கட்டுப்பாட்டுடன் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு தேவை என்று கூறியுள்ளார் இவர்.
இதையும் தேடு: குழந்தைகள், இணையதளம், அடிமை

தமிழ்த் தட்டச்சு முறைகள்


தமிழ்த் தட்டச்சு முறைகள் என்பது கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான பல்வேறு முறைகளைப் பற்றியதாகும். தமிழில் பல வகையான மென்பொருட்கள் மற்றும் எழுத்துருக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் விசைப்பலகை அமைப்பு, எழுத்து வகைகள், எழுத்துரு அமைப்புகள் போன்றவைகளும் தனித்தனியாக இருக்கின்றன. இதனால் இணையத்திற்கான தமிழ் எழுத்துருக்களைப் பலரும் தனித்தனியாக அவர்கள் வசதிக்குத் தகுந்தபடி தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர்.


விசைப்பலகை



கணிப்பொறியில் தமிழைத் தட்டச்சு செய்யும் விசைப்பலகை அமைப்புகள் பல இருக்கின்றன. கீழ்காணும் நான்கு தட்டச்சு முறைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  • தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை
தமிழ்த்தட்டச்சு விசைப்பலகை (Tamil type writing key board) எனும் இந்த விசைப்பலகை தட்டச்சு எந்திரத்தில் பயன்படுத்தப்படும் முறையைத் தழுவி அமைக்கப்பட்டது. பாமினி, அமுதம், கிருதி தமிழ், மீசன், குறிஞ்சி போன்ற தமிழ் எழுத்துருக்கள் இந்த விசைப்பலகை முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • தமிழ் 99 விசைப்பலகை
தமிழ்நாடு அரசு 1999 ஆம் ஆண்டு தமிழ்வலை 99 (Tamilnet 99) எனும் விசைப்பலகை முறையை அறிமுகப்படுத்தியது. தமிழ் தட்டச்சு தெரியாத அனைவரும் எளிதாகப் பார்த்து மாற்று விசையின் உதவியின்றி தட்டச்சு செய்யும் முறையில் இந்த விசைப்பலகை அமைக்கப்பட்டிருக்கிறது.
  • உச்சரிப்பு வழி விசைப்பலகை
அனைத்து மொழிகளையும் பயன்படுத்தும் அச்சுத் தொழில் சார்ந்த துறைகளில் பொதுவான ஒலியியல் குறியீடுகளுக்குத் தகுந்ததாகத் தட்டச்சு செய்யும் முறையில் இந்த உச்சரிப்பு வழி விசைப்பலகை (Phonetic key board)அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் தமிழில் அதிகம் பயன்படுத்தும் மயிலை எழுத்துருவிற்கான விசைப்பலகை குறிப்பிடக் கூடியதாக இருக்கிறது.
  • மாற்றுமொழி விசைப்பலகை
மாற்றுமொழியின் வாயிலாகத் தட்டச்சு செய்யும் வழியில் ஆங்கில எழுத்துச் சேர்க்கையின் மூலம் தமிழ்மொழியைத் தட்டச்சு செய்யும் முறையில் இந்த மாற்றுமொழி விசைப்பலகை (Transliteration or Romanised key board) அமைக்கப்பட்டிருக்கிறது.
  • பிற விசைப்பலகைகள்
இது தவிர எளிமையாகத் தட்டச்சு செய்து கொள்ளக்கூடிய வகையிலும் சில விசைப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில பத்திரிகை நிறுவனங்கள் தங்கள் அமைப்பின் பயன்பாட்டிற்கு மட்டும் என்று தனிப்பட்ட விசைப்பலகை முறையை அமைத்துக் கொண்டுள்ளன என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.


எழுத்துரு வகைகள்



கணிப்பொறியில் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் எழுத்துருக்களில் அவை உருவாக்கப்பட்ட அடிப்படையைக் கொண்டு அதன் வகைகள் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் மூன்று வகைகள் அதிகப் பயன்பாட்டில் இருக்கின்றன.

  • உண்மை வடிவ எழுத்துரு
கணிப்பொறியில் பயன்படுத்தும் தமிழ் எழுத்துருக்கள் உண்மை வடிவ எழுத்துருக்கள் (TTF-True Type Font) எனும் வகையிலும், அடோப் வடிவ மேலாளர் (Adobe Type Manager) எனும் வகையிலும் இருக்கின்றன.
  • திறந்த வடிவ எழுத்துரு
அடோப் மற்றும் மைக்ரோசாஃப்ட் எனும் கணிப்பொறி நிறுவனங்கள் இணைந்து திறந்த வடிவ எழுத்துருக்கள் முறையை (Open Type Fonts) உருவாக்கியிருக்கின்றன. இந்த எழுத்துருக்கள் பல இயக்கச் சூழல்களிலும் இயங்குவதால் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. ஆங்கிலம் இல்லாத கூட்டெழுத்து, வரிவடிவ எழுத்துக்களை உடைய மொழிகளுக்கு இந்த எழுத்துருக்கள் சிறந்ததாக இருக்கிறது.
  • ஒருங்குறி எழுத்துரு
உலகம் முழுவதும் அனைத்து மொழிகளையும் ஒன்றிணைக்க ஒருங்குறி ஒருங்குறி கூட்டமைப்பு (Unicode Consortium) என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் பல நாடுகளும், கணிப்பொறி நிறுவனங்களும் அங்கத்தினர்களாக இருக்கின்றனர். இந்த அமைப்பின் தரப்படுத்தப்பட்ட எழுத்துருவாக ஒருங்குறி எழுத்துருக்கள் (Unicode Font) இருக்கின்றன. தமிழ் மொழிக்கும் இந்த ஒருங்குறி எழுத்துக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • பிற எழுத்துருக்கள்
இது தவிர அச்சுப் பணிகளுக்குத் தகுந்ததாக திறந்த உண்மை வடிவ எழுத்துருக்கள் (Open True Type Fonts) மற்றும் கணிப்பொறித் திரையில் துல்லியமாகப் பார்க்கத் தகுந்ததாக தெளிவு வடிவ எழுத்துரு (Clear Type Font) போன்றவைகளும் பயன்பாட்டில் இருக்கின்றன.


எழுத்துரு அமைப்புகள்



பிற மொழிகளை அடிப்படையாகக் கொண்டு சில தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் குறிப்பாக நான்கு வகைகள் அதிகப் பயன்பாட்டில் இருக்கின்றன.

  • தமிழ் தனி மற்றும் இரு மொழி வடிவம்
1999-ல் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ் 99 விசைப்பலகையின் தட்டச்சு முறையில் தமிழ் தனி மொழி வடிவம் (TAM-Tamil Monolingual) மற்றும் தமிழ் இரு மொழி வடிவம் (TAB-Tamil Bi-Lingual) என்று இரண்டு வழியிலான எழுத்துருக்கள் இருக்கின்றன. தமிழ் தனி மொழி வடிவ எழுத்துருக்களை தமிழ் மொழி மட்டும் தட்டச்சு செய்வதற்கும், தமிழ் இரு மொழி வடிவம் இடையிடையே ஆங்கிலம் மொழியிலும் சேர்த்து தட்டச்சு செய்வதற்கும் உதவுகிறது.
  • அமெரிக்கத் தரக் குறியீட்டின் தகவல் உள்மாற்றம்
ஆஸ்கி ஆங்கில எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் (ASCII-American Standard Code for Information Interchange) இவ்வகையைச் சேர்ந்தது.
  • தமிழ் தரக் குறியீட்டின் தகவல் உள்மாற்றம்
திஸ்கி - தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் (TSCII-Tamil Standard Code for Information Interchange) இவ்வகையைச் சேர்ந்தது.
  • இந்தியத் தரக் குறியீட்டின் தகவல் உள்மாற்றம்
இந்தி எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் (ISCII-Indian Standard Code for Information Interchange) இவ்வகையைச் சேர்ந்தது.


பயன்பாடு



தமிழ் எழுத்துருக்களில் மாற்று மொழி விசைப்பலகை மூலம் அம்மா (ammaa) என்று தட்டச்சு செய்வது எளிதாக இருப்பதால் இந்த விசைப்பலகையைப் பயன்படுத்தியுள்ள எழுத்துருக்களைத் தட்டச்சு செய்ய அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். சிலர் தமிழ்நெட்-99 எழுத்துருவைப் பயன்படுத்துகின்றனர்.

ஒருங்குறி அமைப்பு எழுத்துருக்கள் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் கணிப்பொறியில் புதிய இயக்கச் செயலிகளை நிறுவியிருந்தால் குறிப்பிட்ட எழுத்துருவை நிறுவாவிட்டாலும் எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன. எனவே ஒருங்குறி எழுத்துருவை பயன்படுத்தும் வழக்கம் இப்போது தமிழ் இணைய தளங்களில் அதிகரித்திருக்கிறது.

Saturday, August 4, 2012

உங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி ?


தமிழில் நீங்கள் இனையதளங்களில் டைப் செய்யவேண்டும் என்றால் முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈகலப்பை என்ற மென்பொருளின் சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.


ஈகலப்பையை டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்:

சுட்டி


இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்கள் கம்ப்யூட்டரின் வலதுபக்கம் டைம் பக்கத்தில் கீழ் காண்பதுபோல் ஒரு ஐக்கான் வந்து இருக்கும். அந்த ஐக்கானை கிளிக் செய்து இரண்டாவதாக உள்ள "அ" UNICODETAMIL என்பதை தேர்ந்தெடுத்துவிட்டு இனைய தளத்தில் நீங்கள் விரும்பும் இடத்தில் தமிழில் டைப் செய்யலாம்.


இதில் முதலாவதாக உள்ள "அ" TSCIIANJAL என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் MSword, Ms Excel போன்றவற்றில் தமிழில் டைப் செய்யலாம். இதில் டைப் செய்யும்போது இதன் Font Type ஐ TSCU_paranar என்ற டைப்புக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

அதாவது

கம்ப்யூட்டரில் டைப் செய்ய: "அ" TSCUANJAL
நெட்டில் டைப் செய்ய :: "அ" UNICODETAMIL



முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.


புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....

நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........

சரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா ?

கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும் சாதாரண பிரட்ச்சனைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது.

அப்படி சாதாரணமாக வரக்கூடிய பிரட்ச்சனை என்னென்ன ?

1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட ரெம்பவும் வேகம் குறைந்ததாக (Slow) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.

முதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சாப்ட்வேர்களால் (Automatic Running Programes) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.

இதற்க்கு நீங்கள் Start பட்டனை அழுத்தி Run என்று வருவதை கிளிக் செய்து






அதில் msconfig என்று டைப் செய்து எண்டரை அழுத்தினால் உங்களுக்கு ஒரு தட்டு ஓப்பன் ஆகும்


அதில் Startup என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அங்கு டிக் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களில் உங்களுக்கு எந்த புரோகிராம் தேவை இல்லாமல் தானாக திறக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த புரோகிராம் பெயரில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு OK செய்துவிடலாம்.

அடுத்து Start > Control Panel > Add or Remove Programs சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த தேவை இல்லாத மென்பொருள்களை (Software) நீக்கிவிடலாம்.



அடுத்து My Computer > C Drive சென்று அதன் வலது புறம் கிளிக் செய்து Properties ஐ தேர்ந்தெடுத்து Disk clean up என்ற இடத்தை கிளிக் செய்து



அதில் உள்ள அனைதையும் டிக் செய்து தேவை இல்லாத பழைய டெம்ரவரி பைல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இதில் உள்ள பைல்களை அழிப்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை.

அடுத்து Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற பகுதிக்குச் சென்று Defragment என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரை கிளின் செய்யலாம்.



இந்த மூன்று முறையில் உங்கள் கம்ப்யூட்டரை கிளீன் செய்வதால் உங்கள் கம்ப்யூட்டரில் முன்பு இருந்த வேகம் குறைவு நீங்கி சிறப்பாக செயல்படும். இதைச் செய்ய நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர் தேவையில்லை.

2)உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறுதலாக செய்யப்போக உங்கள் கம்ப்யூட்டரில் உங்களை வேலை செய்யவிடாமல் கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பிரட்ச்சனையான பகுதி (Error Display) அடிக்கடி ஓப்பன் ஆகி உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்.





இந்த பிரட்ச்சனை தட்டை (Error Display) எப்படி போக வைப்பது.

உங்கள் கம்ப்யூட்டரில் Start பட்டனை கிளிக் செய்து Help and Support என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அதில் undo change your computer with System Resotre என்ற இடத்தை கிளிக் செய்து
restore my computer earliery time என்ற இடத்தை கிளிக் செய்தால்
உங்களுக்கு காலெண்டர் போல ஒரு தட்டு ஓப்பன் ஆகும்
அதில் நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக உங்கள் கம்ப்யூட்டரில் பிரட்ச்சனை இல்லாமல் இருந்த நாளை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து Next > Next அழுத்தி Finish செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் ஒரு முறை மூடி திறக்கும் (Restart). அப்படி திறந்த உடன் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பிரட்ச்சனை தட்டு (Error Display) மருபடியும் வராது.

3) நீங்கள் தினமும் இண்டெர் நெட் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் அந்த இண்டெர் நெட் உங்கள் கம்ப்யூட்ருக்கு வருவதற்க்கு என்னென்ன செட்டப் செய்யப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது பிரட்ச்சனை இல்லை. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் தேதி மற்றும் நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் இரண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இனைந்தது போன்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது விளக்கு போல மின்னுவதால்தான் இண்டெர் நெட் வருகிறது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் திடீரென அந்த ஐக்கான் அந்த இடத்தில் இல்லாமல் போய் இண்டெர் நெட் வேலை செய்யவில்லை என்றால் அதை எங்கு போய் எடுப்பது மறுபடி இண்டெர் நெட்டை எப்படி வேலை செய்ய வைப்பது என்பது உங்களுக்கு தெரியாது. அதற்க்காக கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவரை கூப்பிட்டு வந்து அவருக்கு பணம் கொடுத்து அதை கொண்டு வருவீர்கள்.

சரி......... அதை எப்படி கொண்டு வருவது.

உங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop-ல்) My Network Place என்ற ஒரு ஐக்கான் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் சரி இல்லை என்றால் அப்படியே அந்த கம்ப்யூட்டர் படத்தில் (Wallpaper-ல்) உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து Properties சென்று Desktop என்ற தளைப்பை தேர்ந்தெடுத்து Customize Desktop என்ற பட்டனை கிளிக் செய்து மேலே My Network Place என்று எழுதப்பட்ட இடத்தில் பக்கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் கிளிக் செய்து டிக்கை வரவைத்து ok செய்து அதை மூடிவிடுங்கள்.

இப்பொழுது My Network Place என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு வலது புறம் கிளிக் செய்து Open என்ற இடத்தை அழுத்துங்கள்.
உடனே உங்களுக்கு My Network Place என்ற ஒரு பகுதி ஓப்பன் ஆகும். அதில் வலது புறத்தில் View Network Connections என்று எழுதப்பட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.அடுத்து உங்களுக்கு அதன் வலது புறத்தில் Local Aria Connection என்று ஒரு ஐக்கான் தோன்றும். அந்த ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் வரும் Enable என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.
உடனே உங்களுக்கு பழையபடி உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar டைம் பக்கத்தில் அந்த இண்டெர் நெட் இரண்டு கம்ப்யூட்டர் ஐக்கான் வந்துவிடும்.
இனி உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டை நீங்கள் பார்க்கலாம்.





சரி.......... இனிமேல் இப்படிப்பட்ட பிரட்ச்சனைகள் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தால் நீங்கள் தான் மாஸ்டர்.........