Thursday, January 17, 2019

வாட்ஸ்ஆப் செயலியில் க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி அறிமுகம்.!

வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட வண்ணம் உள்ளது, அதன்படி முன்பு வாட்ஸ்ஆப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே, இதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் க்ரூப் கால் வசதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சேர்க்கப்பட்டது.



இந்த அம்சம் பயனுள்ள வகையில் இருந்தாலும், வீடியோ கால் மேற்கொள்வது சற்றே சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது, பின்பு முதலில் ஒரு நபருடன் வீடியோ கால் துவங்கி பின் மற்றவர்களை அதில் இணைத்துக் கொள்ள வேண்டும்.தற்சமயம் சிக்கல் நிறைந்த அம்சமாக இருந்தாலும், விரைவில் இது எளிமையாக்கப்படுகிறது.


ஆண்ட்ராய்டு பீட்டா தற்சமயம் வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.9 செயலியில் வீடியோ கால் செய்ய பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதனால் க்ரூப் சாட் செய்யும் போது ஒற்றை கிளிக் மூலம் வீடியோ கால் செய்யலாம் எனவும் பின்பு பலருக்கு ஓரே சமயத்தில் வீடியோ கால் செய்ய க்ரூப் காண்டாக்ட்கள் இடம்பெற்றிருக்கும் ஸ்லைடிங் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.


க்ரூப் கால் ஷார்ட்கட் இந்த புதிய அப்டேட் மூலம் க்ரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலியில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது என வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரைவில் க்ரூப் வீடியோ கால் பட்டன் ஏற்கனவே ஐஒஎஸ் செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்காப்படுகிறது.


பிழை பின்பு சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலியில் கண்டறியப்பட்ட பிழை பயனரின் பழைய குறுந்தகவல்களை தானாக அழிக்க செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது, இதில் பலர் தங்களது வாட்ஸ்ஆப் குறுந்தகவல்கள் தானாக அழிந்துவிட்டதாக அவரவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


2015-ம் ஆண்டு சில பயனர்கள் 2015-ம் ஆண்டு அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் அழிந்து போனதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர் குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும் பிழை குறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Friday, January 10, 2014

Government Hcl Dual Core Laptop Drivers



Government Free Hcl Dual Core Laptop Driver Download Link For Windows XP and Windows 7:

1. Lan Driver Download Link:

          Click Here

2. VGA Display Driver Download Link:

          Click Here

3. Inf Driver download Link:

         Click Here

4. Chipset Driver Download Link:

         Click Here

5. Sound Audio Driver Download Link;

         Click Here

Government Hasee Laptop Drivers

Government Hasee Laptop Driver Download Link:

1. VGA Display Driver Download Link:

         Click Here

2. INF Driver Download Link:

         Click Here

3. Chipset Driver Download Link:

         Click Here

4. Lan Driver Download Link:

        Click Here

5. Sound Driver Download Link: 

        Click Here

6. IRST DRIVER DOWNLOAD

      Click Here

7. IMEI Driver Download

    Click Here

Saturday, August 18, 2012

வாங்காத லேப்டாப்க்கு பணம் கேட்பதா? தனியார் வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம்


புதுடெல்லி: வாங்காத கம்ப்யூட்டருக்காக வாடிக்கையாளரிடம் பணம் கட்டச் சொல்லி மிரட்டிய எச்டிஎப்சி வங்கி, ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:டெல்லியை சேர்ந்தவர் கெம்சந்த் மிஸ்ரா. அவரது கிரெடிட் கார்டு எண்ணை தெரிந்து கொண்ட ஒருவர், டெல்லியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் கடைக்கு சென்றார். அங்குள்ள ஒரு லேப்டாப்பை விலை பேசினார். ரூ.46,490 மதிப்புள்ள அந்த லேப்டாப்பை வாங்கி கொண்டு அதற்காக தனது கிரெடிட் கார்டு எண்ணை கூறி, அதில் பதிவு செய்து பணம் பெற்றுக் கொள்ளும்படி கூறினார். அவரிடம் கார்டு இல்லாததால் கம்ப்யூட்டரை விற்க அந்த கடை அதிபர் மறுத்து விட்டார்.இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து கெம்சந்த் மிஸ்ராவுக்கு எச்டிஎப்சி வங்கியில் இருந்து போன் வந்தது. அதில் பேசியவர், ‘ரூ.46.490க்கு ஒரு லேப்டாப் வாங்கியுள்ளீர்கள். அதற்கான பணத்தை கட்டுங்கள்’ என்று கூறினார். உடனே அதற்கு மிஸ்ரா மறுப்பு தெரிவித்தார். ஆனால் அதை நம்பாமல் அடிக்கடி போன் செய்து மிஸ்ராவுக்கு வங்கி தொல்லை கொடுத்தது.

அத்துடன் கலெக்ஷன் ஏஜென்ட்களை அனுப் பியும் மிரட்டியது.இதையடுத்து எச்டிஎப்சி வங்கி மீது டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் மிஸ்ரா வழக்கு தொடர்ந் தார். வழக்கை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சி.கே.சவுத்ரி விசரித்து அளித்த தீர்ப்பு வருமாறு: கம்ப்யூட்டர் கடையில் லேப்டாப் வாங்கவில்லை என்று மிஸ்ரா பலமுறை கூறியும் கேட்காமல் மிஸ்ரா மீது ஏஜென்ட்களை வங்கி ஏவி விட்டுள்ளது. கம்ப்யூட்டர் கடையின் சார்பில் குறிப்பிட்ட வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டுக்கு கடையில் இருந்து எந்த லேப்டாப்பும் விற்கவில்லை என்று எழுத்து மூலமாக உறுதியளிக்கப்பட்டது. 

அதேபோல வங்கியில் இருந்து கம்ப்யூட்டர் கடைக்கு பணமும் அனுப்பவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்க வாடிக்கை யாளர் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டியதும் ஏஜெ ன்ட்களை அனுப்பியதும் வங்கி செய்த மன்னிக்க முடியாத தவறு. எனவே மிஸ்ராவுக்கு எச்டிஎப்சி வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கீ போர்டைப் பற்றி சற்று கவனிப்போமா?

தினந்தோறும் தான் கீ போர்டை நாம் கவனித்துப் பயன்படுத்தி வருகிறோம். இதில் என்ன புதுமையாகக் கவனிக்கப் போகிறோம் என்று எண்ணுகிறீர்களா. பல புரோகிராம்களை நம் இஷ்டப்படி செட் செய்கிறோம். எம்.எஸ். ஆபீஸ், இணைய பிரவுசர்கள் என எதனை எடுத்தாலும் ஷார்ட் கட் கீகள் கொடுத்து நம் விருப்பத்திற்கேற்றபடி ட்யூன் செய்கிறோம். ஆனால் கீ போர்டை ஏதாவது செய்து, நமக்கு வசதியாக மாற்ற வழிகள் உள்ளனவா என்ற சிந்தனை நமக்கு ஏற்படுவதில்லை. ஆனாலும் கீ போர்டையும் நமக்கு ஏற்றபடி சற்று மாற்றி அமைத்து செட் செய்திட முடியும்.



அவற்றை இங்கு காணலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே இதற்கான பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாக அவற்றைக் காணலாம்.


முதலில் Start கீ அழுத்தி பின் கிடைக்கும் மெனுவில் தேர்ந்தெடுத்து Control Panel செல்லவும். அதன்பின் கிடைக்கும் விண்டோவில் சிஸ்டம் சார்ந்த பல பிரிவுகள் கிடைக்கும். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ்
எக்ஸ்பிக்கு முந்தையதாக இருந்தால் Printers and Other Hardware என்னும் ஐகானிலும் விண்டோஸ் எக்ஸ்பியாக இருந்தால் Keyboard என்னும் ஐகானிலும் கிளிக் செய்திடவும். உடன் Keyboard Properties என்னும் விண்டோ கிடைக்கும். இதில் Speed என்னும் டேபை அழுத்த கிடைக்கும் பிரிவுகளில் Character Repeat என்ற பிரிவினைக் காணவும். இதில் கொடுத்துள்ள நீள அளவைக் கோட்டில் Slow மற்றும் Fast என இரண்டு அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஒரு கீயைத் தொடர்ந்து அழுத்துகையில் அந்த கீக்கான எழுத்து எவ்வளவு வேகமாக அல்லது மெதுவாக திரையில் அமைக்கப்படவேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
குடூணிதீ என்பதனை நோக்கி அதில் உள்ள அளவுக் கோட்டினை இழுத்து அமைத்த பின் கீழே தரப்பட்டிருக்கும் நீள செவ்வகக் கட்டத்தில் எவ்வளவு மெதுவாக என்பதை ஒரு கீயை அழுத்திப் பார்த்து சோதனை செய்து கொள்ளலாம். பின் Slow மற்றும் ஓகே அழுத்தி வெளியேறலாம்.


இதன் பின் ஒரு கீயைத் தொடர்ந்து அழுத்தினால் அதற்கான எழுத்துக்கள் மெதுவாக டெக்ஸ்ட்டில் அமையும். ஆனால் ஒரு கீயை அழுத்துகையில் மட்டுமல்ல, தொடர்ந்து வேகமாக இதுவரை டெக்ஸ்ட் டைப் செய்து பழக்கப்பட்டவர்கள் இப்போது சிறிது மெதுவாக டெக்ஸ்ட் டைப் ஆவதை உணர்வீர்கள். மேலும் ஒரு வரியை வேகமாக அழிக்க வேண்டும் என எண்ணி பேக் ஸ்பேஸை அழுத்த்த்துவீர்கள்; ஆனால் உங்கள் வேகத்திற்கு இடம் கொடுக்காமல் மேலே சொன்னபடி மெதுவாகவே அழிக்கப்படும். அப்போது ஏண்டா இதனை மெதுவாக அமைத்தோம் என வருத்தப்படுவீர்கள்.


இதே அமைப்பில் இன்னொரு விஷயத்தையும் மேற்கொள்ளலாம். கம்ப்யூட்டரில் செயலாற்றுகையில் செயலின் இதயத் துடிப்பைப் போல மின்னி மின்னி நமக்கு போக்கு காட்டுவது கர்சரின் துடிப்பே. இந்த துடிப்பினையும் வேகமாக இருக்கவேண்டுமா அல்லது மெதுவாக இருக்க வேண்டுமா என்பதனையும் இதே விண்டோவில் மேற்கொள்ளலாம். None / Fast என்ற இரு அளவுகளில் ஏதேனும் ஒரு நிலையில் அளவு கோட்டினை அமைக்கலாம். கர்சர் எப்படி துடிக்கும் என்பதனை அருகில் காட்டப்படும் கர்சர் துடிப்பதனைக் கொண்டு உணரலாம். நாம் விரும்பும்படி இதனையும் அமைத்துவிட்டு அப்ளை மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியே வரலாம்.கீ போர்டு அது அமரும் இடத்துடன் பதிந்து அமர்ந்து இருப்பது நம் விரல்களின் இயக்கத்தை அதன் போக்கில் விடாமல், கஷ்டப்படுத்துவதாக இருக்கலாம். அதற்குப் பதிலாக அது சற்று உயர்ந்திருந்தால் நமக்கு வசதியாக இருக்கும். இதற்காகவே கீ போர்டின் பின்புறம் மேலாக இரு கிளிப்கள் தரப்பட்டிருக்கும். இதனை எடுத்து நீட்டி, உயர்த்தி வைக்கலாம். சற்று உயர்ந்த நிலையில் டைப் செய்வது எளிதாக இருக்கும்.

பைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா?

கீழே நாம் அதிகமாக பயன்படுத்தும் பைல் போமட்கள் சிலவற்றினை பார்ப்போம்.

txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை
பைல்களில் எந்தவிதமான பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர்தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.
.rich: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில்ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவிதவேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.
.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும்இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால்வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.
.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும்பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல்புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஒன்றில்தான்இதனைத் திறக்க முடியும்.
ppt: விண்டோஸின் பிரிமியம் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட்தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.
pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போலவந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப்பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்தபைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல்டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்தவகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள்கிடைக்கின்றன. அடோப் அக்ரோபட் ரீடர் உட் பட இந்த வகை பைல்களைத்திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.
htm / html :ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக்கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது எனஅடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர்புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்கஇருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத்திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள்கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.
csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள்என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில்இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல்புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால்போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.
2.சுருக்கப்பட்ட பைல்கள்:
கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும்பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச்சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின்அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும்இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அதுசுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்டஇணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில்அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.
rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சிலஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியைமிக அழகாகச் செய்து முடித்திடும்.
cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம்ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால்விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனைகேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர்தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவேஇதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.
3.பட பைல்கள்:
விண்டோஸ் இயக்கத்தில் பலவகையான பட பைல்களைஉருவாக்கலாம்; கையாளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். போட்டோக்கள், ஸ்கேன் செய்யப்பட்ட பைல்கள் ஆகியவை இந்த வகைகளே. கீழே நீங்கள் அடிக்கடி சந்திக்கும் சில வகை இமேஜ் பைல்களின் துணைப்பெயர்கள் தரப்படுகின்றன.
psd: அடோப் போட்டோ ஷாப் பயன்படுத்தி இமேஜ் எடிட் மற்றும்உருவாக்கப்படும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் வழங்கப்படும். உங்களிடம்அடோப் போட்டோ ஷாப் இல்லை என்றால் பைல் வகை மாற்றத்திற்கு வழிசெய்திடும் புரோகிராம் ஒன்றின் (Hercule Software’s Graphic Converter) மூலம் இதன்பார்மட்டை மாற்றி வேறு துணைப் பெயருடன் அதே பைலை உருவாக்கிப் பின்அதற்கான புரோகிராமில் திறக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட மாற்றித்தரும்புரோகிராம் http://www.herculesoft.com என்னும் முகவரியில் கிடைக்கிறது.
psp: இந்த துணைப் பெயர் கொண்ட பைல் போட்டோ ஷாப் போன்ற இன்னொருஇமேஜ் எடிட் புரோகிராமான Paint Shop Pro என்னும் புரோகிராமில் உருவானபைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். இந்த புரோகிராம் சற்று விலைஅதிகமானது. இந்த பைல்களையும் கன்வெர்டர் கொண்டு மாற்றலாம்.
bmp: மிக எளிமையான கிராபிக்ஸ் பைல். இதனை பிட்மேப் பைல் என்றும்அழைப்பார்கள். விண்டோஸ் பெயிண்ட் உட்பட எந்த இமேஜ் புரோகிராம்மூலமும் இதனைத் திறக்கலாம்.
jpg: இது ஒரு பொதுவான இமேஜ் பைல் வடிவமாகும். இதன் பயன்பாடுஇன்டர்நெட்டில் அதிகம். ஏனென்றால் இந்த துணைப் பெயர் கொண்ட இமேஜ்பைலின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். இந்த பைலை உருவாக்க அதிநவீன பைல் கம்ப்ரஷன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பலவித இமேஜ்புரோகிராம் மூலம் இதனைத் திறந்து பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர்தொகுப்பு இந்த வகை பைல்களைப் பார்க்க மிக எளிமையான புரோகிராமாகும்.
gif: இதுவும் மிகவும் பிரபலமான ஒரு இமேஜ் வகை பைல் ஆகும். இதனையும்விண்டோஸ் எக்ஸ்புளோரர் கொண்டு திறந்து பார்ப்பது எளிது.
tif: ஹோம் கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் இமேஜ்களைப் பதிந்து வைத்துப்பயன்படுத்த இந்த துணைப் பெயர் கொண்ட பைல் வகைகள் அதிகம்பயன்படுத்தப்படுகின்றன. இதனைப் பல இமேஜ் எடிட்டிங் புரோகிராம்களில்திறந்து பயன்படுத்தலாம் என்றாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரர்எளிமையானதாகும்.
scr: இது விண்டோ ஸ்கிரீன் சேவர் பைலின் துணைப் பெயர். ஒரு ஸ்கிரீன் சேவர்பைல் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட கண்ட்ரோல் பேனல் சென்றுடிஸ்பிளே புராபர்ட்டீஸ் விண்டோ பெற்று அதில் ஸ்க்ரீன் சேவர் டேப்பினைத்தட்டவும். இங்கு இன்டர்நெட்டில் இருந்து டவுண்லோட் செய்த ஸ்கிரீன் சேவர்பைல் புரோகிராமினை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.
3.ஆடியோ பைல்கள்:
இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக்கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோபைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக் காட்டாக எம்பி3 பைல்கள் இந்தவகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாகஇசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில்கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள்கொண்டதாகவும் கருதப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். விண்டோஸ் மீடியாபிளேயரும் இதனை இயக்கும்.
wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு இசை பைலாகும். டிஜிட்டல்ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர், இதனையும் இயக்குகின்றன.
aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாகவெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.
ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்றுகூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும்துல்லிதமாகவும் தரும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக்கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec) என்னும் ஸ்பெஷல் பைல்வேண்டும். இதனை http://www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.
wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல்வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும்அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனைஇயக்கி ரசிக்கலாம்.
4.ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள்:
சில பைல்களை அதன் மீது டபுள் கிளிக்செய்தால் அவை எந்தவிதமான புரோகிராம் துணை இன்றி தாமாகவே இயங்கும். இவை பெரும்பாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கலாகும். பெரும்பாலான இந்தபைல்கள் கீழ்க்காணும் துணைப் பெயர்களுடன் இருக்கும்.
exe: எக்ஸிகியூட்டபிள் பைல் என்பதன் சுருக்கம். இதில் ஒரு புரோகிராம்இருக்கும். இதனை இருமுறை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் விரித்துஇயங்கும்.
bat: பேட்ச் பைல் என்பதன் சுருக்கம். இந்த பைலில் வரிசையாக பல கட்டளைகள்தரப்பட்டிருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்திடுகையில் அந்த கட்டளைகள்ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த பைலை நோட்பேடில் உருவாக்கலாம்மற்றும் எடிட் செய்திடலாம்.
vbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட்நிறுவனம் உருவாக்கியவிசுவல் பேசிக் என்னும் புரோகிராமிங் மொழி மூலம்புரோகிராமர்கள் விண்டோஸில் இயங்கும் பல அப்ளிகேஷன்களைவடிவமைக்கின்றனர். அந்த பைல்களின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த பைல் இயங்கும். ஆனால் வைரஸ் பைல்களைஎழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வைரஸ்புரோகிராம்களை உருவாக்குகின்றனர். எனவே இந்த துணைப் பெயருடன்உங்கள் இமெயிலில் ஏதேனும் அட்டாச்டு பைல் வந்தால் கவனமாக அதனைஏதேனும் ஆண்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்துப் பின் திறக்கவும்.

கம்ப்யூட்டர் சிக்கல்களுக்கு தீர்வுகள் வழங்கும் செயல் முகாமையாளர்!

உங்கள் கணணி வேகமாக இயங்கவில்லையா?கணனியின்  புரோகிராம்கள் வேலை செய்யாமல்  பின்னர் மீண்டும் வேலை செய்கின்றதா?


இதனால் நீங்கள்  அவசரப்பட்டு கணணியை மீண்டும் பூட் செய்ய முயற்ச்சி செய்வீர்கள். அணி நீங்கள் பூட் செய்ய தேவையில்லை. இந்த வகை சிக்கலுக்கு விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜரில் சில வழிகளைத்
தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஓப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான வழிகள் தரப்பட்டுள்ளன.
விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர் மூலம் கணணியில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள், ப்ராசசர் இயக்கம் மற்றும் பயன்படுத்தப்படும் சேவைகளைக் காணலாம்.
கணணியின் திறனை இதன் மூலம் கண்காணித்து நம் கட்டளைக்கு இணங்காத புரோகிராம்களை மூடலாம். நெட்வொர்க்கில் கணணியில் இணைக்கப்பட்டு இருந்தால் அதனுடன் இணைக்கப்பட்ட பயனாளர்களின் செயல்பாடுகளைக் காணலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஒரே நேரத்தில் எத்தனை புரோகிராம்களையும் இயக்கலாம். கணணியில் உள்ள மெமரி மற்றும் ப்ராசசர் திறன் அளவு தான் ஏத்தனை புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும் என்பதனை வரையறை செய்திடும்.
விண்டோஸ் இயக்கமானது எப்போது எந்த செயலுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனால் இயங்க முடியாமல் போகும் போது திடீரென முடங்குகிறது. இந்த வேளையில் தான் நாம் டாஸ்க் மானேஜரின் உதவியை நாடலாம்.
பல வழிகளில் டாஸ்க் மானேஜரை இயக்கலாம். CTRL-SHIFT-ESC அழுத்தலாம். CTRL-ALT-DEL அழுத்திப் பின்னர் START TASK MANAGER இயக்கலாம் அல்லது டாஸ்க் பாரில் எங்கேனும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் START TASK MANAGER தேர்ந்தெடுக்கலாம்.
டாஸ்க் மேனேஜர் விண்டோவில் எந்த டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கீழாக கார் ஒன்றின் முன்பகுதி போர்டு போல தோற்றத்தில் ஓர் இடம் காட்டப்படும். அதில் எத்தனை இயக்கம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது, ப்ராசசரின் திறனில் எத்தனை விழுக்காடு பயன்படுத்தப்பட்டு வருகிறது, மெமரியின் அளவில் பயன்படுத்தப்படும் இடம் ஆகியன காட்டப்படும்.
டாஸ்க் மானேஜரின் முக்கிய விண்டோவில் APPLICATIONS, PROCESSES, SERVICES, PERFORMANCE, NETWORKING, AND USERS ஆகிய டேப்கள் காட்டப்படும். இவற்றில் APPLICATIONS, PROCESSES, SERVICES ஆகிய டேப்கள் தான் நாம் கணணியில் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கொண்டிருக்கின்றன.
முதல் முதலாக டாஸ்க் மேனேஜரைத் திறக்கும் போது APPLICATIONS டேப் நமக்குக் காட்டப்படும். கணணியில் இயக்கப்பட்டு டாஸ்க்பாரில் காட்டப்படும் புரோகிராம்கள் இதில் காட்டப்படும். சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டுள்ள சிஸ்டம் புரோகிராம்கள்(எ.கா. மைக்ரோசாப்ட் சிஸ்டம் எசன்சியல்ஸ்,யாம்மர் போன்றவை) இந்தப் பட்டியலில் காட்டப்படமாட்டாது.
ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த வேண்டும் என்றால் அதனைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்து மெனுவில் உள்ள END TASK பிரிவில் கிளிக் செய்தால் போதும். ஆனால் அப்ளிகேஷன் டேப்பில் மிக முக்கியமானது அதில் உள்ள STATUS பிரிவாகும். இதன் மூலம் புரோகிராம் ஒன்று முறையாக இயங்கிக் கொண்டிருக்கிறதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய கட்டளைக்கு எந்த சலனமும் காட்டாத புரோகிராம்கள் “NOT RESPONDING” எனக் காட்டப்படும். இது போன்ற இயக்கத்தை நிறுத்திக் கொண்ட புரோகிராம்களை அதன் வலது மூலையில் உள்ள எக்ஸ் அழுத்தி முடிவிற்குக் கொண்டு வர முடியாது. அந்த நேரத்தில் டாஸ்க் மேனேஜர் மூலம் புரோகிராமினை நிறுத்தலாம்.
டாஸ்க் மேனேஜரின் இதயத் துடிப்பு PROCESSES டேப் பிரிவில் தான் உள்ளது. புரோகிராம்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்த டேப்பில் கிடைக்கும் பிரிவுகளே நமக்கு அதிகம் பயன்படுகின்றன.
இதன் மாறா நிலையில் IMAGE NAME (செயல்பாட்டில் உள்ள கோப்புகள் பெயர்கள்), USER NAME (பயனாளர் பெயர் அல்லது சிஸ்டம் செயல்முறை), CPU (ப்ராசசர் செயல்பாட்டில் எத்தனை விழுக்காடு பயன்பாட்டில் உள்ளது), MEMORY (செயல்முறை ஒன்று எந்த அளவு RAM மெமரியைப் பயன்படுத்துகிறது என்ற தகவல்) மற்றும் DESCRIPTION (ஒரு செயல்முறை என்ன என்பதைப் பற்றிய சிறு விளக்கம்) ஆகிய பிரிவுகள் காட்டப்படுகின்றன.
இதில் மேலாக உள்ள பிரிவுகளின் டேப்பில் கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப்படும். பயனாளர் எனில் அகர வரிசைப்படுத்தப்படும். மெமரி பயன்பாடு எனில் அதிக அல்லது குறைவாக மெமரியினைப் பயன்படுத்தும் புரோகிராம்களிலிருந்து வரிசைப்படுத்தப்படும்.
கணணி மிகவும் குறைவான வேகத்தில் இயங்கினால் அல்லது நம் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் இருந்தால் மெமரி டேப் கிளிக் செய்து ஏதேனும் ஒரு புரோகிராம் வழக்கத்திற்கு மாறாக அதிக மெமரியைப் பயன்படுத்தியது தெரியவந்தால் அங்கே தான் பிரச்னை உள்ளதை அறிந்து அதன் இயக்கத்தினை இங்கேயே மூடலாம். இதே முறையில் சி.பி.யு பிரிவையும் கையாண்டு உண்மை நிலையை அறியலாம்.
இதே போல SERVICES டேப் மூலம் சில வகை சேவைகள் நிலை குறித்து அறியலாம். இங்கு இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும். STOPPED OR RUNNING இயங்கும் சர்வீஸை நிறுத்தலாம். நிறுத்தப்பட்டிருப்பதைத் தொடங்கலாம்.
பிரச்னைகள் ஏற்படுகையில் ஒவ்வொரு இயங்கும் சர்வீஸை நிறுத்தி பிரச்னை தீர்கிறதா எனக் கண்காணிக்கலாம். எதனை நிறுத்துகையில் பிரச்னை தீர்க்கப்பட்டு கணணி வழக்கமான இயக்கத்திற்கு வருகிறதோ அந்த சர்வீஸை நிறுத்திவிட்டு அதனை மீண்டும் நிறுவச் செய்திடலாம் அல்லது புதியதாய்த் தொடங்கலாம்.

யுஎஸ்பி3 பற்றிய சில முக்கிய தகவல்கள்.

கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.



தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.

யு.எஸ்.பி.3 அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணர முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் வன்தட்டுகளின் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம்.

மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில் இந்த இரண்டு தொழில்நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3 ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது.

யு.எஸ்.பி.2 ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும் யு.எஸ்.பி சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

கணணி செயல்பாட்டினைப் பொறுத்த வரை இரு சாதனங்களுக் கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகையில் ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும் ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

எடுத்துக்காட்டாக பழைய கணணியில் யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில் கணணியின் செயல் திறன் மெதுவாக இருந்தால் யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.

இந்த இரண்டு தொழில்நுட்பங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு தகவல் செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 தகவலை அனுப்பும் அதே நேரத்தில் தகவலை பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும்.

இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில்நுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.

யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.

வைரஸ், டீரோஜன், வோர்ம் நேற்றும் நாளையும்

கம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், பிரச்னை எத்தகையது என்பதை வரையறை செய்வதுதான் கடினமான ஒரு சிக்கலாகும். பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல வேறுபாடான கருத்துக்களும் செயல்முறைகளும் இருந்து
வருகின்றன. ஒரு சிலர் பெர்சனல் கம்ப்யூட்டரில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமை யானவையாகவே இருக் கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால், பெர்சனல் கம்ப்யூட்டர் களிலும், மேக் கம்ப்யூட்டர்களிலும், கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்?



இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன், மால்வேர் புரோகிராம் ஒன்று எப்படி கம்ப்யூட்டருக்குள் நுழைகிறது என்பதனை அறிந்திருக்க வேண்டும். ஆனால், அங்குதான் வேறுபட்ட கருத்துக்களும் முடிவுகளும் உருவாகின்றன.
மேக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் சிஸ்டத்தின் கட்டமைப்பே பாதுகாப்பற்றது என்று, தவறாக, கூறுகின்றனர். ஒரு சில இணையதளங்களுக்குச் செல்வதன் மூலமும், சில இமெயில்களைத் திறப்பதன் மூலமும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், மால்வேர் தொகுப்புகளைத் தங்கள் கம்ப்யூட்டரில் நுழைய விட்டுவிடுவதாகச் சொல்கின்றனர். இது முற்றிலும் உண்மையானது இல்லை. 

இரண்டு வகைக் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை சில விஷயங்களை ஒத்துக் கொண்டாக வேண்டும். 1. வைரஸ், வோர்ம், ட்ரோஜன் மற்றும் பல பெயர்களில் நாம் பத்து ஆண்டுகளுக்கு முன் தந்த விளக்க வரையறைகள், இப்போது உள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்குப் பொருந்தாது.
நீங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் செக்யூரிட்டி அப்டேட் பேட்ச் பைல்களை டவுண்லோட் செய்து இணைத்து இயக்கிவிட்டால், டவுண்லோட் செய்வதன் மூலம் வைரஸ்கள் வருவதற்கு இடமே இல்லை. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பொறுத்தவரை, அவை பரவும் விதம், கெடுதல் விளைவிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு சில குழுக்களாகப் பிரித்துவிடலாம். 

சமுதாய அடிப்படையில் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே, பெரும்பாலானவர்கள் தங்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ் புரோகிராம்களை அனுமதித்து விடுகின்றனர். ஒரு சிலர் மேக் கம்ப்யூட்டர்களில் மால்வேர் மட்டுமே நுழையும். வைரஸ்கள் நுழைவ தில்லை என்று தவறாக முடிவு செய்கின்றனர்.

இன்றைய கால கட்டத்தில் வைரஸ்கள் என்று நாம் முன்பு பெயரிட்டது போல கெடுதல் விளைவிக்கும் நாசகார புரோகிராம்கள் வருவதில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த மெலிஸ்ஸா என்றழைக்கப்பட்ட வைரஸ் தான், உண்மையிலேயே வைரஸ் ஒன்றின் அனைத்து கெடுதல் முகங்களையும் கொண்டிருந்தது. அதன்பின் வைரஸ் என்று சொல்லப்பட்ட புரோகிராம்களின் கெடுதல் தன்மை அவ்வளவு தீவிரமாக இல்லை. பின் வந்த காலங்களில், மால்வேர் எனப்படும் கெடுதல் புரோகிராம்களே அதிகமான எண்ணிக்கையில் இருந்தன. சில இணைய தளங்களுக்குச் செல்கையில், அதில் உள்ள சில குறியீடுகள் இயங்கி, கம்ப்யூட்டரின் பபர் நினைவகத்தினைக் காலி செய்து, நேராக கம்ப்யூட்டரை இந்த மால்வேர் புரோகிராம்கள் சென்றடைந்தன. இந்த தளங்கள் பெரும்பாலும் சமுதாய இணைய தளங்களாகவோ, அல்லது அது போன்ற போர்வையில் தகவல்களைத் தந்து, மக்களை ஈர்ப்பனவாகவோ உள்ளன என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 

மிக அதிகமான சேதத்தை விளைவித்தது கான்பிக்கர் வோர்ம் தான். 2010 ல் இதன் விளைவு மிக அதிகமாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், 2008 ஆம் ஆண்டிலேயே, இந்த வோர்ம் வந்த வழியில் இருந்த பிரச்னைகளுக்கான தீர்வு ஒரு பேட்ச் பைலாகத் தரப்பட்டது. ஆனால், பலர் அதனைக் கொண்டு தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திடாமல் விட்டுவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைவு மிக மோசமாகப் பின்னாளில் இருந்தது.

யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்களின் ஆட்டோ ரன் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பல ட்ரோஜன் வைரஸ்கள் உலவி வருகின்றன. AutoRun, Rimecud Hamweq ஆகிய மூன்றும் இந்த தன்மை உடையவையே. ஆட்டோ ரன் தன்மையின் மூலம் மால்வேர் இன்ஸ்டால் செய்யப் படுவதில்லை. இதன் மூலம் டயலாக் பாக்ஸ் ஒன்றைக் காட்டி, அதன் மூலம் வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதே இதன் வழிமுறையாகும். 

தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் என்ற பாகுபாடு இன்றி, வைரஸ்கள் அனைத்து சிஸ்டங்களிலும் பரவும் வகையிலேயே உருவாக்கப்பட்டு அனுப்பப் படுகின்றன. இருப்பினும் அனைத்து வைரஸ் பரவும் வழிகளுக்கும் உடனுடக்குடன் தீர்வுக்கான பேட்ச் பைல்கள் உருவாக்கப்பட்டு வழங்கப் படுகின்றன. இவற்றைக் கொண்டு நம் சிஸ்டத்தினை அப்டேட் செய்வது ஒன்றே நாம் நம் கம்ப்யூட்டரைப் பாதுகாத்திடும் வழியாகும்.

நோட்பேடை பயன்படுத்தி கோப்புறையினை பூட்டுவது எப்படி?

ஒரு கோப்புறையினை  மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் நோட்பேடை மாத்திரம் வைத்து ஒரு கோப்புறையினை எவ்வாறு பூட்டுவது என்று பார்ப்போம்.


உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.
முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்
ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும்.இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .
Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .

உங்கள் குடும்பத்தினர் அனைவரின் உடல் நலம் குறித்து அறிய உதவும் இணையதளம்

உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அவர்களின் உடல் நலம் குறித்து தகவல் அறியவும்,
பொதுவான உடல் நலம் பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் எனவும், ஒரு குடும்ப டாக்டர் கூறக் கூடிய அறிவுரைகள் அனைத்தையும் தாங்கி உள்ளது http://familydoctor.org/online/famdocen/home.html என்ற முகவரியில் உள்ள தளம். இதன் பெயரே Family Doctor என்பதுதான். 



இந்த தளத்தை நான் விரும்பிப் பரிந்துரைக்கக் காரணம், எளிதில் இதில் தகவல்களைப் பெறும் வகையில் வடிவமைப்பு கொண்டிருப்பதுதான். Home, Conditions A to Z, Women, Men, Smart Patient Guide, Parents & Kids, Healthy Living, Senior Living, and OTC Guide எனப் பல பிரிவுகளில் தகவல்களைப் பெறலாம். இந்த டேப்களுக்கு மேலாக, தேடல் தளம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் நாம் தேட விரும்பும் தகவல் குறித்து டைப் செய்து, அருகே உள்ள பச்சை வண்ண அம்புக் குறியை அழுத்தினால் போதும். தகவல்கள் கிடைக்கின்றன. 

இதன் முதன்மைப் பக்கத்தில் நம் உடல்நிலை எப்படி உள்ளது என்று என்ற பிரிவில் கொடுத்து தகவல் பெறலாம். நம் நிலை குறித்த எழுத்தினைக் கிளிக் செய்து, அதில் நம் நிலை குறித்து கொடுக்கப் பட்டுள்ளதா என அறியலாம். இதற்கும் மேலாக, இதன் இடது பக்கத்தில் ஹெல்த் டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக, நோய் அறிகுறி, நோய் அகராதி, மருந்து குறித்த தகவல்கள் எனவும் தகவல்களைப் பெறலாம். 

பட்டியலின் கீழாக, டேப்களில் கொடுக்கப் பட்டிருப்பது போல, சில வகைத் தலைப்புகள் தந்திருப்பதனைக் காணலாம். நமக்கும் நம் குடும்ப உறுப்பினர்களுக்கான உடல்நலம் மற்றும் நோய் குறித்த சிறந்த ஓர் தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றே இதனைக் கண்டு பயன்பெறவும்.

நிங்கள் மின்னஞ்சலை பயன்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கைகள்

இன்று அனைத்து தகவல் பரிமாற்றத்திலும் இமெயில் எனப்படும் மின்னஞ்சல் இடம் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பல முறை, நாம் பல்வேறு வகையான தகவல் பரிமாற்றத்திற்கு இதனைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இதனை அமைப்பதிலும், அனுப்புவதிலும் பல தவறுகளை பலமுறை செய்கிறோம். எங்காவது சில வேளைகளில் தடுமாறி விடுகிறோம். நான் எவ்வகையான தவறுகளைச் செய்கிறோம்
என்று எண்ணிப் பார்க்கலாமா!

1. முகவரிகளை அதன் அட்ரஸ் புக்கிலிருந்து கிளிக் செய்கையில், அனுப்ப வேண்டியவரின் முகவரிக்குப் பதிலாக, வரிசையில் அடுத்தபடியாக இருப்பவரின் முகவரியைக் கிளிக் செய்து, சரியான நபரின் முகவரியைக் கிளிக் செய்துள்ளோமா என்று பார்க்காமலேயே அனுப்பி விடுகிறோம்.

2. அஞ்சல் செய்தியை அமைக்கையில் இடையே எழுந்து செல்ல வேண்டி வரும். பின்னர், எழுதி முடித்துவிட்டோம் என்று எண்ணி, அனுப்பிவிடுவோம். 

3. பலர் எழுதியுள்ள அஞ்சல்களின் இடையே, நம் பதிலை ஒரு வருக்கு மட்டும் அனுப்ப எண்ணி, கடிதத்தினை எழுதி, பின்னர், அதனை அனைவருக்கும் அனுப்பி கெட்ட பெயர் வாங்கிக் கொள்வோம்.

4. அஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டிய பைல்களை இணைக்காமலேயே, அல்லது இணைக்கப்படுகையில் இடையிலேயே Send பட்டனை அழுத்தி, அரைகுறையாக அனுப்பிவிடுவோம்.

5. ஒருவரின் அஞ்சலுக்குப் பதில் அனுப்புகையில், அவரின் மாற்றப்பட்ட அஞ்சல் முகவரிக்குப் பதிலாகப் பழைய அஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுவோம். அவர் தனக்கு வரவில்லை என்று அடுத்து அஞ்சல் அனுப்பிய பின்னரும், சரியாகச் சோதனை செய்து பார்க்காமல், ""நான் அனுப்பினேன்'' என அடித்துச் சொல்வோம்.

6. பல வேளைகளில் அஞ்சல் முகவரிகளைத் தொலைபேசி வழியாகப் பெறுவோம். அப்போது தவறாகக் குறித்துக் கொண்டு, அஞ்சல் அனுப்புவோம்.
 அது திரும்பி வருகையில், முகவரியைச் சொன்னவரைக் குறை சொல்வோம்.

7. மிகவும் பெரிய பைலை இணைத்து அனுப்பி, அதனைப் பெறுபவரின் பொறுமையைச் சோதிப்போம். 

8. சப்ஜெக்ட் கட்டத்தில், அஞ்சலின் பொருளை எழுதாமல், என்னைக் கண்டுபிடி என்கிற மாதிரி வாசகம் எழுதுவோம்.

9. பல வேளைகளில் நமக்குக் கிடைத்த இணைய லிங்க்குகளை மற்றவருக்கு அனுப்பி, இதை எல்லாம் கிளிக் செய்து, இணைய தளங்களைப் பார் என்று செய்தியும் அனுப்புவோம். அதனை காப்பி செய்து பேஸ்ட் செய்கையில், டைப் செய்து அனுப்புகையில், ஏதேனும் தவறு இருக்கிறதா எனச் சோதிப்பதில்லை. இறுதியில் அஞ்சல் மூலம் அவற்றைப் பெற்றவருக்குச் சோதனையாக இவை அமையும்.

இது போன்ற பல தவறுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவற்றில் பல பெரிய தவறுகளை எப்படி முன்னெச் சரிக்கையாக தடுக்கலாம் என்று இங்கு காணலாம்.

1. எப்போதும் அஞ்சலைப் பெறுபவர் அல்லது பெறுபவர்களின் முகவரிகளை, அஞ்சல் செய்தியை டைப் செய்து அடித்து முடித்த பின்னர், இணைப்புகளை இணைத்த பின்னர், இறுதியாக அமைக் கவும். இது நாம் அஞ்சலை முழுமையாக முடித்துவிட்டோம் என்பதனை உறுதி செய்கிறது. அவசரப்பட்டு அனுப்புவதனைத் தடுக்கிறது. முகவரி இல்லாமலேயே அனுப்ப முயற்சித்தால், இமெயில் புரோகிராம் நம்மை எச்சரிக்கும். அப்படியே அனுப்பிவிட்டாலும், அது யாருக்கும் போய்ச் சேராது. இதே போல அஞ்சலுக்குப் பதில் அஞ்சல் அனுப்புகையில், ரிப்ளை பட்டன் அழுத்தியவுடன், இமெயில் புரோகிராம் அஞ்சலை அனுப்பியவரின் முகவரியை அமைத்துக் கொள்ளும் அல்லவா! உடனே அதனை காப்பி செய்து, கட் செய்து, அஞ்சல் செய்தியின் முதல் வரியாக வைத்துக் கொள்ளவும். அஞ்சலை டைப் செய்து முடித்தவுடன், முதல் வரியில் உள்ள முகவரியை மீண்டும் கட் செய்து, பெறுபவரின் முகவரிக்கான கட்டத்தில் பேஸ்ட் செய்திடவும்.

2. பைல் ஒன்றை இணைக்க விரும்பினால், அஞ்சல் செய்தியினை எழுதும் முன் இணைக்கவும். இது அந்த பைலை இணைக்க முடியுமா என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். இணைக்க மறப்பதைத் தடுக்கும். 

3. உங்களிடமிருந்து பதில் அஞ்சல் வரவில்லை என்று பதில் கடிதம் அனுப்புபவருக்கு, நீங்கள் பயன்படுத்திய அவரின் முகவரியை செய்தியாக அவருக்கு அனுப்பவும். அவர் வேறு முகவரிகள் பயன்படுத்துகிறாரா என்பதனைக் கவனிக்கவும்.

4. ஒருவருக்கு பதில் அஞ்சல் அனுப்புகையில், அவர் எந்த முகவரியைப் பயன்படுத்தி அஞ்சல் அனுப்பினாரோ, அதனையே பயன்படுத்தவும். வேறு பழைய முகவரிக்கு அனுப்பினால், அவரின் ஸ்பேம் பில்டர் போன்ற வசதிகள், அதனைத் தடை செய்திட வாய்ப்பு உண்டு.

5. நீங்கள் புதிய மின்னஞ்சல் முகவரி ஒன்றினைப் பயன்படுத்துகையில், அதனைப் பெறுபவருக்கு உறுதியாகத் தெரிவிக்கவும். 

6. புதிய முகவரி ஒன்றை ஒருவரிடம் இருந்து அறியும் போதும், பேச்சு வாயிலாக ஒருவரின் மின்னஞ்சல் முகவரியைப் பெறும் போதும், அதற்கு சோதனை மடல் ஒன்று அனுப்பி, அதனை உறுதி செய்து கொள்ளவும்.

7. நீங்களாக முகவரியினை டைப் செய்திடுவதைத் தவிர்க்கவும். அனுப்பு பவரிடமிருந்து அஞ்சல் வந்திருந்தால், அல்லது அட்ரஸ் புக்கில் அவர் முகவரி இருப்பின், அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்திடவும். கிளிக் செய்து அமைக்கும் வசதி இருப்பின் அதனைப் பயன்படுத்தவும்.

8. முகவரிகளை அமைக்கையில் தானாக அதனை அமைக்கும் வசதி கொண்ட இமெயில் புரோகிராம்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிலரின் இமெயில் முகவரிகளின் முதல் ஐந்தெழுத்துக்கள் வரையில் ஒரே மாதிரியாக இருக்க சந்தர்ப்பம் உண்டு. Anandan, Ananya, Anandu, Ananthi ... என்ற பெயர்கள் உள்ள முகவரியை டைப் செய்கையில், உங்கள் இமெயில் புரோகிராம் எதனை வேண்டுமானாலும் அமைக்கலாம். எனவே எது அமைக்கப்படுகிறது; அதுதான் நீங்கள் அனுப்ப விரும்பும் நபரின் முகவரியா என ஒருமுறைக்கு இருமுறை பார்த்து உறுதிப் படுத்திக் கொள்ளவும். இதே போல இணைய தள லிங்க்குகளை அப்படியே மற்றவருக்கு அனுப்ப வேண்டாம். அதில் நீங்கள் கிளிக் செய்து, தளங்கள் தடங்கலின்றிக் கிடைக்கின்றனவா என்று சோதனை செய்த பின்னர், சரியாக இருந்தாலே அனுப்பவும். சில வேளைகளில், மோசமான தளங்கள் இந்த முகவரிகளில் இருக்கலாம். கவனிக்காவிட்டால், நமக்குக் கெட்ட பெயர் கிடைக்கும்.

9. சப்ஜெக்ட் கட்டத்தில், சுருக்கமாக செய்தியின் சாராம்சத்தை தெரிவிக்கவும். சிலர் செய்திக்கு மாறாக சப்ஜெக்ட் லைன் அமைப்பார்கள். அதனை மட்டும் படித்து மாறாக செய்தியை எண்ணிக் கொள்ளலாம்.

10. பெரிய பைல்களை இணைத்து அனுப்பாமல், அவற்றை அனுப்ப வேறு இணைய தளங்கள் தரும் வசதியைப் பயன்படுத்தவும். அஞ்சலில் அதற்கான காரணத்தையும், லிங்க்கையும் தரவும்.