Showing posts with label விண்டோஸ் XP. Show all posts
Showing posts with label விண்டோஸ் XP. Show all posts

Monday, October 10, 2011

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி ?

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி ?

என் பதிவுகளுக்கு சிறந்த பின்னூட்டம் கொடுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

மேலும் இந்த தளத்தில் புதிதாக இனைந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

தினமும் இந்த தளத்திற்க்கு வருகை தரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !


உங்கள் அனைவருக்காகவும் என் அடுத்த பதிவு.






















விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது மிக எளிதான ஒன்றாக இருந்தாலும் சிலருக்கு அதில் சில சந்தேகங்கள் இருப்பதன் காரணமாக கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்றாலே கொஞ்சம் தயக்கம் வரத்தான் செய்கிறது.

நீங்கள் தயங்கும் அளவிற்க்கு விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்பது அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. மிக எளிதான முறையில் இன்ஸ்டால் செய்வதற்க்கு ஏற்ற வகையில்தான் இந்த விண்டோஸ் ஆபரேடிங்க் சிஸ்டம் உள்ளது.

அதை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது பற்றி இந்த பாடத்தில் நாம் பார்ப்போம்.





























































































































































































































































































































































































































































விண்டோஸ் எக்பியை ஒரிஜினல் விண்டோஸ் எக்ஸ்பி CD மூலம் இங்கு சொன்ன முறைப்படி நீங்கள் இன்ஸ்டால் செய்தாலும் அதனை இண்டெர்நெட் அல்லது போன் மூலம் ஆக்டிவ் செய்யாதவரை அது முழுமையாக ஆக்டிவ் ஆகாது. ஆக்டிவ் செய்யவில்லை என்றால் 30 நாட்களுக்கு பிறகு உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் திறக்க முடியாமல் போய்விடும்.


எனவே இன்ஸ்டால் செய்து முடிந்த பிறகு நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர் நெட் செட்டப் செய்துகொண்டு Start > All Programs > Active Windows என்ற இடத்திற்க்கு சென்று Yes let's Active Windows Over the Internet now என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Next என்ற பட்டனை கிளிக் செய்து அடுத்துவரும் பகுதியில் Yes I Want Register & active windows at the same time என்பதை தேர்ந்தெடுத்து Next என்பதை கிளிக் செய்து உங்கள் பெயர் முகவரி அட்ரஸ் போன்றவற்றை டைப் செய்துவிட்டு Next ஐ அழுத்தினால் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி ஆக்டிவ் ஆகிவிடும்.

இந்த இண்டெர்நெட் ஆக்டிவ்க்கு பதிலாக போன் ஆக்டிவ் செய்யவேண்டுமென்றால் Yes I want to telephone a customer service respresentative to active windows என்பதை செலெக்ட் செய்து Next என்பதை கிளிக் செய்து நீங்கள் வசிக்கும் நாட்டின் பெயரை தேர்ந்தெடுத்து அந்த நாட்டிற்க்கு கொடுக்கப்பட்டுள்ள கஸ்டமர் சர்வீஸ் நம்பருக்கு தொடர்புகொண்டு அவர்கள் கொடுக்கும் ஆக்டிவ் நம்பரை வாங்கி உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை ஆக்டிவ் செய்துகொள்ளலாம்.
நீங்கள் வாங்கும் ஒரிஜினல் விண்டோஸ் எக்ஸ்பி CD ஒரு கம்ப்யூட்டரில் மட்டும்தான் பயன்படுத்த முடியும். அதே CD ஐ இன்னொரு கம்ப்யூட்டருக்கு பயன்படுத்தினால் அதனை ஆக்டிவ் செய்ய முடியாது. இந்த CD வேறொரு கம்ப்யூட்டருக்கு ஆக்டிவ் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வந்துவிடும்.


மேலும் விபரங்களுக்கு இந்த மைக்ரோசாப் இணைய தளத்தை பாருங்கள்:
http://www.microsoft.com/windowsxp/using/setup/winxp/register.mspx


அடுத்து உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை Genuine Validation ஆக மாற்றுவதற்க்கான விளக்கத்திற்க்கு கீழ் கானும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
http://www.microsoft.com/windowsxp/using/setup/winxp/validate.mspx




முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி ?


என் பதிவுகளுக்கு சிறந்த பின்னூட்டம் கொடுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

மேலும் இந்த தளத்தில் புதிதாக இனைந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

தினமும் இந்த தளத்திற்க்கு வருகை தரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !


உங்கள் அனைவருக்காகவும் என் அடுத்த பதிவு.






















விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது மிக எளிதான ஒன்றாக இருந்தாலும் சிலருக்கு அதில் சில சந்தேகங்கள் இருப்பதன் காரணமாக கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்றாலே கொஞ்சம் தயக்கம் வரத்தான் செய்கிறது.

நீங்கள் தயங்கும் அளவிற்க்கு விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்பது அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. மிக எளிதான முறையில் இன்ஸ்டால் செய்வதற்க்கு ஏற்ற வகையில்தான் இந்த விண்டோஸ் ஆபரேடிங்க் சிஸ்டம் உள்ளது.

அதை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது பற்றி இந்த பாடத்தில் நாம் பார்ப்போம்.





























































































































































































































































































































































































































































விண்டோஸ் எக்பியை ஒரிஜினல் விண்டோஸ் எக்ஸ்பி CD மூலம் இங்கு சொன்ன முறைப்படி நீங்கள் இன்ஸ்டால் செய்தாலும் அதனை இண்டெர்நெட் அல்லது போன் மூலம் ஆக்டிவ் செய்யாதவரை அது முழுமையாக ஆக்டிவ் ஆகாது. ஆக்டிவ் செய்யவில்லை என்றால் 30 நாட்களுக்கு பிறகு உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் திறக்க முடியாமல் போய்விடும்.


எனவே இன்ஸ்டால் செய்து முடிந்த பிறகு நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர் நெட் செட்டப் செய்துகொண்டு Start > All Programs > Active Windows என்ற இடத்திற்க்கு சென்று Yes let's Active Windows Over the Internet now என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Next என்ற பட்டனை கிளிக் செய்து அடுத்துவரும் பகுதியில் Yes I Want Register & active windows at the same time என்பதை தேர்ந்தெடுத்து Next என்பதை கிளிக் செய்து உங்கள் பெயர் முகவரி அட்ரஸ் போன்றவற்றை டைப் செய்துவிட்டு Next ஐ அழுத்தினால் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி ஆக்டிவ் ஆகிவிடும்.

இந்த இண்டெர்நெட் ஆக்டிவ்க்கு பதிலாக போன் ஆக்டிவ் செய்யவேண்டுமென்றால் Yes I want to telephone a customer service respresentative to active windows என்பதை செலெக்ட் செய்து Next என்பதை கிளிக் செய்து நீங்கள் வசிக்கும் நாட்டின் பெயரை தேர்ந்தெடுத்து அந்த நாட்டிற்க்கு கொடுக்கப்பட்டுள்ள கஸ்டமர் சர்வீஸ் நம்பருக்கு தொடர்புகொண்டு அவர்கள் கொடுக்கும் ஆக்டிவ் நம்பரை வாங்கி உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை ஆக்டிவ் செய்துகொள்ளலாம்.
நீங்கள் வாங்கும் ஒரிஜினல் விண்டோஸ் எக்ஸ்பி CD ஒரு கம்ப்யூட்டரில் மட்டும்தான் பயன்படுத்த முடியும். அதே CD ஐ இன்னொரு கம்ப்யூட்டருக்கு பயன்படுத்தினால் அதனை ஆக்டிவ் செய்ய முடியாது. இந்த CD வேறொரு கம்ப்யூட்டருக்கு ஆக்டிவ் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வந்துவிடும்.


மேலும் விபரங்களுக்கு இந்த மைக்ரோசாப் இணைய தளத்தை பாருங்கள்:
http://www.microsoft.com/windowsxp/using/setup/winxp/register.mspx


அடுத்து உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை Genuine Validation ஆக மாற்றுவதற்க்கான விளக்கத்திற்க்கு கீழ் கானும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
http://www.microsoft.com/windowsxp/using/setup/winxp/validate.mspx




முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.

Saturday, May 14, 2011

ADMINISTRATOR PASSWORD - HARD DISK மற்றும் PROCESSOR மூலம் DELETE செய்வது

HARD DISK 

1. உங்களுடைய HARD DISK  கழற்றி  மற்றொரு கணினியில் பொருத்தவும் .

2. இப்போது உங்களுடைய HARD DISK பொருத்தப்பட்டுள்ள கணினியை SECONDARY HARD DISK  மூலம்  பூட் செய்யவும் .

3. தயவு செய்து PRIMARY HARD DISK  பயன்படுத்தாதிர்கள் ..

4. Windows போல்டர் -> system32 போல்டர் -> config போல்டர் வரிசையாக திறக்க வேண்டும்

5. கடைசியாக திறந்த config போல்டரில் உள்ள
 SAM.exe மற்றும் SAM.log   இரு File களை  Delete  செய்யவும்.

 
உங்களுடைய  HARD DISK  கழற்றி CPU போட்டு  Boot   செய்யவும்.



PROCESSOR 



1.CPU -  முதலில் ஒப்பன் செய்து மதர் போர்டை கழட்டி அதில் உள்ள சீமாஸ் பேட்டரியை தனியாக எடுத்துவிடவும்.

2.Processor Fan  கிளிப்பியை எடுத்து அதன் கீழ் பகுதில் உள்ள  ஜாக்கெட் லீவர் மேல் பக்கம்மாக தூக்கி Processor  பிளேட்டை தனியாக எடுத்துவிடவும்.

3.15 நிமிடம் கழித்து பழைய படி மீண்டும் Processor  பிளேட் -  Processor Fan  -  சீமாஸ் பேட்டரி மாட்ட பழைய செட்டிங் மற்றும் பாஸ்வேர்ட் நீக்கப்பட்டு சிஸ்டம் தயார் நிலையில் இருக்கும்.

               ‘இது கொஞ்சம் ரிஸ்க் அதிகம்’

மரித்த நீலத்திரை – எக்ஸ்பி – சரி செய்ய முயலுங்கள்

வணக்கம் நண்பர்களே .
                                                    
 
     விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திரை’ என்று தமிழ்ப் படுத்தலாம் .
இந்த கட்டுரை , மரித்த நீலத்திரையில் சில வகை வாசகங்கள் தோன்றினால் , அந்த எரர்களை சரி செய்யும் வழிமுறைகளை பற்றியது .
முதலில் உங்களிடம் எக்ஸ்பி சிடி இருக்க வேண்டும் . இந்த கட்டுரை , உங்கள் டிரைவுகள் ‘என் டி எப் எஸ்’ ரக பார்மேட்டை கொண்டிருக்கும் என்ற தோரனையில் எழுதப்பட்டது . உங்களுடையது பேட் 32 ரகமாக இருப்பின் , சில வழிமுறைகள் மிச்சமாகும்.
முதலில் உங்கள் எரர் கீழ்கண்ட சொற்களை உடையதாக இருப்பின் , இந்த வழிமுறை கண்டிப்பாக வேலை செய்யும் . ஒரு வேலை எரர் மெஸேஜை படிக்க முடியாமல் வேகமாக ரீஸ்டார்ட் ஆனாலும் நீங்கள் இவ்வழிமுறையை முயற்சித்து பார்க்கலாம் .

Windows XP could not start because the following file is
missing or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM


Windows XP could not start because the following file is missing
or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE

Stop: c0000218 {Registry File Failure} The registry cannot load the hive
(file): \SystemRoot\System32\Config\SOFTWARE or its log or alternate
System error: Lsass.exe
When trying to update a password the
return status indicates that the value provided as the current password is not
correct.

இவைதானென்றில்லை , மேலும் சில வகை ரெஜிஸ்ட்ரி எரர்களுக்கும் இந்த முயற்சியை மேற்கொள்லலாம் . இனி ஆப்பரேசனுக்கு தயாராகுங்கள் .
முதற் பகுதி
 ரெக்கவரி கன்சோலுக்குள் செல்வது
   அதற்கு முதலில்
  •     கணினியை ரீஸ்டார்ட் செய்யுங்கள் . செய்யும்போது டெலீட் கீயை தட்டிக்கொண்டே இருங்கள் .
  •     இப்போது பையாஸ் மெனு வரும் . அதில் பூட் ஆப்சன்ஸ் சென்று பூட் டிவைஸ் பிரையாரிட்டியை முதலில் சிடியில் இருந்து பூட் செய்யுமாறு மாற்றி அமையுங்கள் .
  •     உங்கள் எக்ஸ்பி சிடியை சொருகி ரீஸ்டார்ட் செய்யுங்கள்
  •     உங்கள் “press any key to boot from cd …. ” என்று திரையில் வாசகம் தெரியும் . அப்போது ஏதாவது ஒரு கீயை தட்டி சிடியில் இருந்து பூட் செய்ய சொல்லுங்கள்
  •     கொஞ்ச நேரம் டிவைஸ் டிரைவர்கள் எல்லாம் லோட் ஆகும் .
  •     பிறகு உங்களிடம் புதிதாக விண்டோஸ் இன்ஸ்டால் செய்யவா அல்லது ரிப்பேர் செய்யவா என்று கேட்கும் . ‘ஆர்’ பட்டனை அழுத்தி ரிப்பேர் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும் .


நீங்கள் அனேகமாக ரெக்கவரி கண்சோலுக்குள் நுழைந்து விடுவீர்கள் .
பின்னர் உங்களின் எந்த இன்ஸ்டாலேசனை சரி செய்ய வேண்டுமோ அதற்குள் நுழையுங்கள் . பாஸ்வேர்டு கேட்கும் , கொடுங்கள் . பெரும்பாலான கணினிகளில் இது பிளாங்க் ஆக இருக்கும் .
பிறகு கீழ்கண்ட கமாண்டுகளை தேவையான ஸ்பேஸ் விட்டு , உள்ளது உள்ளபடி ,
தட்டுங்கள் . இதில் C:\ கோலன் என்பது உங்கள் இயங்குதளத்தின் ரூட் பாத் . அதாவெது நீங்கள் ‘ஐ’ டிரைவில் விண்டோசை நிறுவியிருந்தால் “c:\” பதில் “I:\” என்று மாற்றிதட்ட வேண்டும் .
md tmp
copy C:\windows\system32\config\system C:\windows\tmp\system.bak
copy C:\windows\system32\config\software C:\windows\tmp\software.bak
copy C:\windows\system32\config\sam C:\windows\tmp\sam.bak
copy C:\windows\system32\config\security C:\windows\tmp\security.bak
copy C:\windows\system32\config\default C:\windows\tmp\default.bak
delete C:\windows\system32\config\system
delete C:\windows\system32\config\software
delete C:\windows\system32\config\Sam
delete C:\windows\system32\config\security
delete C:\windows\system32\config\default
copy C:\windows\repair\system C:\windows\system32\config\system
copy C:\windows\repair\software C:\windows\system32\config\software
copy C:\windows\repair\sam C:\windows\system32\config\sam
copy C:\windows\repair\security C:\windows\system32\config\security
copy C:\windows\repair\default C:\windows\system32\config\default
ஒவ்வொரு வரியை டைப் செய்தவுடன் என்டர் கீயை தட்டவும் . இதில் எல்லா ‘காப்பி’ கமாண்டுகளும் “பைல் காப்பீட்” என்ற மெஸேஜை வெற்றிகரமாக எக்சிக்யூட் ஆனவுடன் தரும் . “டெலீட்” கமாண்டுகள் எந்த அடையாளமும் காட்டாமல் அடுத்த பிராம்ப்டுக்கு சென்றுவிடும் .
இப்போது EXIT என்று அடியுங்கள் . 
 
இது சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்யும் . உங்கள் சிடியை வெளியில் எடுக்க வேண்டாம் , பிறகு அதில் வேலையி்ருக்கிறது .
சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகும்போது மீண்டும் உங்களிடம் “பிரஸ் எனி கீ ” என்று கேட்கும் , எதையும் அழுத்தாமல் வேடிக்கை மட்டும் பாருங்கள் . உங்கள் சிஸ்டம் தற்பொழுது  பூட் ஆகி GUI  வரை செல்ல வேண்டும் . அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் யாராவது அனுபவசாலியை பக்கத்தில் வைத்து சரிசெய்யவும் , அல்லது சர்வீஸ் சென்டரை கூப்பிடவும்.
 
பகுதி இரண்டு எழுத கொஞ்சம் போரடிக்கிறது நண்பர்களே , கொஞ்ச நேரம் கழித்து அதை எழுதுகிறேன் . சரியா . தற்போதைக்கு உங்கள் கணினி வேலை செய்யும் நிலையை எட்டி யிருக்கும் . ஆனால் முழுமையாக இன்னும் உங்கள் பழைய செட்டிங்குகள் , சாப்ட்வேர்களை ரீஸ்டோர் செய்வதை அடுத்த பதிவில் காண்போம் . 

அடுத்த பதிவு வரும் வரை பொறுமை யில்லாதவர்கள்  கீழ்கண்ட ஆங்கில பக்கங்களை தயவு செய்து முழுவதுமாக படித்துவிட்டு வேலையை ஆரம்பிக்கவும் . இல்லையன்றால் பாதியில் மாட்டிக்கொள்ள நேரிடும் .
.
இரண்டாம் பாகத்தில் சந்திப்போம் .

மரித்த நீலத்திரை – இரண்டாம் பாகம் [ நிறைவு ]

இந்த பதிவு முதற் பாகத்தின் தொடர்ச்சி ஆகும் . நாம் கடைசி பதிவில் பார்த்தது , நம் கணிப்பொறியை தற்காலிகமாக ஒரு இயக்க நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கும் . ஆனால் அதில் நாம் இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர்கள் , செட்டிங்குகள் போன்றவற்றை கான இயலாது . அதை மீட்கும் முயற்சியைதான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம் .
நாம் இதில் நம்முடைய சிஸ்டத்தை இதற்கு முந்தைய நிலைக்கு ரீஸ்டோர் செய்யப்போகிறோம் .

நாம் எல்லோருமே ‘மைக்ரோஸாப்ட் சிஸ்டம் ரீஸ்டோர் ‘ யுட்டிலிட்டியை உபயோகிப்பதில்லை . துரதிருஸ்ட வசமாக ,அந்த யுட்டிலிட்டியில் நாமாக போய் ரீஸ்டோர் பாயின்டை செட் செய்திருக்க வேண்டும் .இல்லையெனில் அதை உபயோகிப்பதில் பயனில்லை .
ஆனால் அது நமக்கு தெரியாமல் நாம் சிஸ்டத்தை ஸ்டார்ட் செய்யும் பொழுதெல்லாம் செட்டிங்குகளை பேக்கப் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் .என்ன .. அந்த செட்டிங்குகள் இருக்கும் பைல்களை தான் இப்பொழுது நாம் நோண்டப்போகிறோம் .
முதலில் அந்த பைல்களை அனுகுவதுஎப்படிஎன்று பார்ப்போம் .
1) வின்டோஸ்எக்ஸ்புளோரரை ஸ்டார்ட் செய்துகொள்ளுங்கள்
2) டூல்ஸ் -> போல்டர் ஆப்ஷன்ஸ் தேர்வு செய்யுங்கள் .
3) வியூ டேபை தேர்வு செய்யுங்கள்
4) ஹிடன் பைல்ஸ் அன்ட் போல்டர்ஸ் க்கு கீழே “Show hidden files and folders ” தேர்வு செய்யவும் ( செக் பாக்ஸில் டிக் செய்யவும் )
5) அதிலேயே கீழே “Hide protected operating system files (Recommended)” செக் பாக்ஸில் உள்ள செக் மார்க்கை எடுக்கவும் [ டீ செலக்ட் ]
6) இப்போது தோன்றும் டயலாக் பாக்ஸில் “யெஸ்” சொல்லுங்கள் .
7) நீங்கள் வின்டோசை இன்ஸ்டால் செய்திருக்கும் டிரைவுக்குள் செல்லுங்கள் .
இங்கே தான் அந்த அதிக பாதுகாப்புடன் மறைக்கப்பட்ட பேக்கப்புகள் உள்ள ‘system volume information’ போல்டர் மங்கலாக தெரியும் .
நீங்கள் பேட் 32 டிரைவ் வைத்திருந்தீர்களென்றால் அந்த போல்டரை டபுள் கிளிக் செய்தால் உள்ளே போய்விடும் ,” என் டி எப் எஸ் ” டிரைவ் வைத்திருப்பவர்களை உள்ளே வின்டோஸ் உள்ளே விடாது [ " என் டி எப் எஸ் " இன் உருப்படியான பயன்களில் இதுவும் ஒன்று ] .
ஆகவே அந்த பொல்டரை ரைட் கிளிக் செய்து “ஷேரிங் அன்ட் செக்யூரிட்டி” தேர்வு செய்து பின்னர் செக்யூரிட்டி டேபை தேர்வு செய்யுங்கள் .

செக்யூரிட்டி டேப் அங்கே இல்லைஎன்பவர்கள் பின் வரும் வழிகளை பின்பற்றவும்
1) டூல்ஸ் – > போல்டர் ஆப்ஷன்ஸ் -> வியூ [டேப் ] கொடுக்கவும்
2) அதில் உள்ள மெனுவில் கடைசி வரை ஸ்க்ரோல் செய்தால் கடைசியில் “யூஸ் சிம்பிள் பைல் ஷேரிங் அன்ட் செக்யூரிட்டி “என்றொரு ஐட்டம் செக்காகி இருக்கும் , அதை அன்செக் செய்யுங்கள் , வரும் வார்னிங்கை ஓகே சொல்லுங்கள் .

இப்பொழுது செக்யூரிட்டி டேபில் “ADD” என்றிருக்கும் பட்டனி கிளிக் செய்து அதில் “Enter the object names to select “என்றிருக்கும் பாக்ஸில் உங்கள் யூசர் நேமை [கவனம் தேவை] டைப் செய்யவும் .
இப்போது அநேகமாக அந்த போல்டர் உங்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் .எல்லா பாக்ஸிற்க்கும் ஓகே கொடுத்து எக்ஸ்புளோரரில் அந்த போல்டரை திறக்கவும் .

முதலில் டிச்பிளே செட்டிங்கை டீடெய்ல்ட் வியூவிற்க்கு மாற்றிக்கொள்ளுங்கள் . அதில் தெரியப்போகும் டைம் ஸ்டாம்புகள் நமக்கு தேவை .
இங்கே ““_restore{87BD3667-3246-476B-923F-F86E30B3E7F8}” போன்ற பெயர்களில் பல போல்டர்கள் இருக்கும் .
அதில் தற்போதைய நேரத்தில் உருவாகியுள்ளாத ஒரு போல்டரை திறக்கவும் .
இந்த சப் போல்டரில் “RP ***”என்ற பெயரில் பல போல்டர்கள் இருக்கும் . “RP”என்பது ரீஸ்டோர் பாயின்டை குறிக்கும் .
இதிலும் தற்போதைய நேரத்தில் உருவாகியுள்ளாத ஒரு போல்டரை திறக்கவும் .
அதற்க்குள் மேலும் ஸ்நாப்ஷாட் சப் போல்டர்களை திறக்கவும் .
உதாரணத்திற்க்கு : C:\System Volume Information\_restore{D86480E3-73EF-47BC-A0EB-A81BE6EE3ED8}RP1Snapshot
அதிலிருந்து கீழ் கண்ட பைல்களை , நாம் முதல் பதிவில் பார்த்த டெம்பிரரி போல்டருக்கு காபி செய்யவும் .
_registry_user_.default
_registry_machine_security
_registry_machine_software
_registry_machine_system
_registry_machine_sam
இப்போது கணினியை ரீஸ்டார்ட் செய்யவும் . [ சிடி இன்னும் உள்ளேதான் இருக்கிறதுஎன்று உறுதி படுத்திக்கொள்ளவும் ]
ரெக்கவரி கண்சோலுக்குள் நுழையுங்கள் . முதற் பதிவில் சொன்னபடி கமான்ட் பிராம்ப்ட் வரை செல்லுங்கள் .
இப்போது கீழ்கண்ட கமான்டுகளை டைப் செய்யுங்கள் .
Del c:\windows\system32\config\sam
Del c:\windows\system32\config\security
Del c:\windows\system32\config\software
Del c:\windows\system32\config\default
Del c:\windows\system32\config\system
copy c:\windows\tmp\_registry_machine_software c:\windows\system32\config\software
copy c:\windows\tmp\_registry_machine_system c:\windows\system32\config\system
copy c:\windows\tmp\_registry_machine_sam c:\windows\system32\config\sam
copy c:\windows\tmp\_registry_machine_security c:\windows\system32\config\security
copy c:\windows\tmp\_registry_user_.default c:\windows\system32\config\default
[ முதல் பதிவு , டிரைவ் லெட்டர் முக்கியம் நண்பரே , கூடவே சின்டாக்ஸும் ]
இப்போது “exit” என்று டைப் செய்து , சிடியை வெளியில் எடுத்து விட்டு ,ரீஸ்டார்ட் செய்தால் கணிப்பொறி பழைய நிலைக்கு ரீஸ்டோர் ஆகியிருக்கும் .
அவ்ளோதான்
இந்த கொடுமையான தமிழாக்கம் புரியாதவர்கள் , ஒரிஜினல் பதிப்பை இங்கே அப்புறம் இங்கே சென்று படித்துக்கொள்ளுங்கள்

மைக்ரோசாப்ட் ரெக்கவரி கன்சோல் – விண்டோஸ் எக்ஸ்பி . நிறுவுதல்

உங்களுக்கு விண்டோஸ் எக்ஸ்பியில் ‘ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்’ ரக தொந்தரவுகளும் , மற்றும் இன்ன பிற ஸ்டார்ட்டப் பிரச்சனைகள் , லாகின் தொந்திரவுகள் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் , நீங்கள் மறக்காமல் நிறுவ வேண்டிய மென்பொருள் விண்டோஸ் ரெக்கவரி கன்சோல் . 

    அடம்பிடிக்கும் ஒரு எக்ஸ்பி இயங்குதளத்தை வழிக்கு கொண்டுவர ரீஇன்ஸ்டால் செய்வதற்க்கு முன் ஒரு கடைசி முயற்சி கொடுத்து சரி செய்வதற்கு இந்த ரெக்கவரி கண்ஸோல் உதவும் .

    இதை நிறுவுவதற்கு முதலில் விந்டோஸ் எக்ஸ்பி சிடியை எடுத்துக்கொள்ளுங்கள் .  

1) முதலில் சிடியை கணினியில் இட்டு ஸ்டார்ட் -> ரன் , தேர்ந்தெடுங்கள் .
2) வருகிற ரன் டயலாக் பாக்ஸில் CD-ROM drive letter:\i386\winnt32.exe /cmdcons என்று டைப்புங்கள் . 
[ கவனிக்க : இங்கே CD-ROM drive letter என்றிருக்கும் இடத்தில் உங்களுடைய சிடி அல்லது டிவிடி டிரைவின் எழுத்தை கொடுக்க வேண்டும் .
 
3)இப்பொழுது வரும் டயலாக் பாக்ஸின் தகவல்களை பின்பற்றி “பினிஷ்”  கொடுங்கள் . 

    இது உங்கள் கணினியில் ரெக்கவரி கன்சோலை நிறுவி விடும் .
உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்தீர்களென்றால் டீபால்டாக முப்பது நொடிகளுக்கு உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பியை பூட் செய்யவா அல்லது ரெக்கவரி கன்சோலை பூட் செய்யவா என்ற மெனு வந்திருக்கும் .
    ரெக்கவரி கன்சோலை உபயோகிக்க உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டு தெரிந்திருக்க வேண்டும் .

    தற்போதைக்கு இவ்வளவுதான். ” மரித்த நீலத்திரை ” யை ரெக்கவரி கன்ஸோல் வைத்து சமாளிக்கும் விதத்தை முந்தைய  பதிவில் பாருங்கள்..

விண்டோஸ் XP - Administrator பாஸ்வேர்ட் Recovery CD உதவியுடன்


1.முதலில் விண்டோஸ் XP Cd-யை பயாஸ் உதவியுடன் பூட் செய்து கொள்ளுங்கள்.

2.XP Cd - உள்ள Set Up File 5 நிமிடத்தில் காப்பியானதும் லைசன்ஸ் அக்ரிமெண்ட் F8 Key அழுத்தி தொடர வேண்டும்.


3.பின்னர் XP Insatallation ஸ்டெப் வரும் அதில் உள்ள Repair Process உரிய R Key அழுத்தி தொடர வேண்டும்.


4.பின்னர் தொடர்ந்து XP Cd 5 நிமிடம் ஒடி சிஸ்டம் ரீஸ்டாட் ஆகும்.


5.Installing Windows ஸ்கீரின் வந்து தொடர்ந்து Installing Devices வரும் போது SHIFT + F10 அழுத்த வேண்டும்.


6.கமாண்ட் பாக்ஸில் NUSRMGR. CPL டைப் செய்து Enter கொடுக்கவும்.


7.இப்போது User Accounts ஒப்பன் ஆகும் அதில் Password Remove (or) Change (or) Control UserPasswords2 கட்டளையை கேட்கும்.


8.பழைய பாஸ்வேர்ட் எடுத்து விடுவது அல்லது புது பாஸ்வேர்ட் கொடுப்பது அல்லது புது யுசர் கணக்கு2 தொடங்குவது நமக்கு வேண்டிய ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.


9.தேர்வு செய்து முடிந்ததும் XP Cd தொடர்ந்து Product Key கொடுத்து 15 அல்லது 20 நிமிடத்தில் XP OS Insatallation முடிந்து விடும்.


10.இப்போது எந்த விதமான மாற்றம் இல்லாமல் நமது புதிய பாஸ்வேர்ட் உ டன் கணினி செயல்படும்

விண்டோஸ் எக்ஸ்பி - பூட் ஆகாத கணினியை சரி செய்ய..

 விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளது போன்ற பிழைச்செய்தி கருப்புத் திரையில் வந்திருக்கலாம்.

Windows could not start because the following file missing
or corrupt:
\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE

You can attempt to repair this file by starting Windows Setup using the original Setup CD-ROM.
Select 'r' at the First screen to start repair.
அல்லது


என்றோ பிழைச் செய்தி
வந்திருக்கலாம். எத்தனை முறை Restart செய்தாலும் கணினி பூட் ஆகாமல் இதேசெய்தி தொடர்ந்து வரும். safe mode சென்றாலும் இதே நிலைதான்.  இந்த நிலையில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை மறுபடி நிறுவாமல் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம்.  முதலில் வருகின்ற பிழைச் செய்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதாவது, \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE என வருகிறதா? அல்லது \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM என வருகிறதா? என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். (SOFTWARE / SYSTEM).  

            இந்த பணியை நாம் Windows Recovery Console லில் செய்ய வேண்டும். மிகச் சில கணினிகளில் மட்டுமே இது நிறுவப்பட்டிருக்கும். இது போன்ற கணினிகளில் பூட் ஆப்ஷனில் Windows Recovery Console என்பது பட்டியலிடப்பட்டிருக்கும்.

விண்டோஸ் Safe mode ஏன் ? எதற்காக ?



மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்துவிடுகிறது.


குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும்.


உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன?

வழக்கமான முறையில் இயக்கத்தினைத் தொடங்க முடியாமல் விண்டோஸ் தத்தளிக்கையில், விண்டோஸ் தான் இயங்க ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் அல்லது வேறு இடத்தில் எத்தகைய தவறு நேர்ந்துள்ளது எனக் கண்டறிய, விண்டோஸ் தானாக வழங்கும் ஒரு வழி இது.

இந்த வழியைக் கண்டறிந்து சரி செய்த பின், இதனை மீண்டும் இயக்கினால், விண்டோஸ் வழக்கம்போல தனக்கு வேண்டிய வழியில் இயங்கத் தொடங்கும். விண்டோஸ் சேப் மோடில் இயங்குகையில், வழக்கமான இயக்கம் இல்லாமல், மாறுபாடான சில வழிகளைக் கையாள்கிறது. அவை என்னவெனப் பார்க்கலாம்.


1. சேப் மோடில் autoexec.bat அல்லது config.sys பைல் இயக்கப்பட மாட்டாது.

2.பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்ற பல துணை சாதனங்களுக்கான டிரைவர்கள் இயக்கப்படாமல் இருக்கும். இந்த ட்ரைவர்கள் தான், அந்த துணை சாதனங்களுக்காக கம்ப்யூட்டருக்கு அவை குறித்து அறிவித்து, இயங்குவதற்குத் துணை புரிபவை.

3. வழக்கமான கிராபிக்ஸ் டிவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக, சேப் மோடில் ஸ்டாண்டர்ட் விஜிஏ கிராபிக்ஸ் மோட் பயன்படுத்தப்படும். இந்த வகை கிராபிக்ஸ், விண்டோஸுக்கு இணையாக இயங்குகின்ற அனைத்து வீடியோ கார்ட்களையும் சப்போர்ட் செய்திடும்.

4. config.sys script பைலின் ஒரு பகுதியாக லோட் செய்யப்படும் himem.sys என்னும் பைல், சேப் மோடில்testmem:on என்ற ஸ்விட்சுடன் இணைத்து தரப்படும். இந்த ஸ்விட்ச், கம்ப்யூட்டருக்கு, இயக்கத்தினைத் தொடரும் முன் அதன் மெமரியை சோதனையிடச் சொல்லி நினைவூட்டும்.

5. விண்டோஸின் மற்ற பைல்கள் எங்கு உள்ளன என்பதற்கான தகவல்களைக் கண்டறிய, சேப் மோட் msdos.sysஎன்ற பைலைச் சோதனையிடும். இந்த பைலைக் கண்டறிந்த பின்னரே, சேப் மோடில் விண்டோஸ் லோட் ஆகும். அப்போது win /d:m என்ற கட்டளையைப் பயன்படுத்தும். விண்டோஸ் பைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், command.com என்ற பைலை இயக்கும். இதன் மூலம் சி ட்ரைவில் கமாண்ட் ப்ராம்ப்ட் இயக்கப்படும்.

6. விண்டோஸ் வழக்கமாக system.ini என்ற பைலுக்குப் பதிலாக, system.cb என்ற தொகுப்பு (batch) பைல் ஒன்ற இயக்கும். இந்த பைல் அனைத்து விர்ச்சுவல் டிவைஸ் ட்ரைவர்கள் (Virtual Device Drivers – VxDs) என்று அழைக்கப் படும், சாதனங்களை இயக்குவதற்கான ட்ரைவர் பைல்களை லோட் செய்திடும். இதுவே கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிடும்.

7. சேப் மோடில் வழக்கமான system.ini பைலுடன் win.ini மற்றும் Registry செட்டிங்ஸ் லோட் செய்திடும். அப்போது பூட் மற்றும் சார்ந்த வரிகளை விலக்கிச் சென்று செயல்படும். மேலும் win.ini பைலில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த புரோகிராமையும் இயக்காது.

8. விண்டோஸ் டெஸ்க் டாப் 16 வண்ணங்களில் லோட் ஆகும். இதன் ரெசல்யூசன் பிக்ஸல்கள் 640 x 480 என்ற வகையில் இருக்கும். “Safe Mode” என்ற சொற்கள் ஒவ்வொரு மூலையிலும் காட்டப்படும். தன் முதல் முயற்சியில் இயங்க முடியவில்லை என்றால், விண்டோஸ் தானாக, சேப் மோடில் இயக்கத்தைத் தொடங்குகிறது.

நாமும் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஸ்விட்சை இயக்கியவுடன், தொடர்ந்து பூட் மெனுவின் போது F5 அல்லது F8 என்ற கீயை அழுத்தி சேப் மோடுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வரலாம்.


சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கினால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில், கம்ப்யூட்டரை வழக்கமாக பூட் செய்திட இயலாமல், எது தடுத்தது என்று கண்டறிய வேண்டும். ஏதேனும் புதியதாக, ஒரு ஹார்ட்வேர் சாதனத்தினை இணைத்திருந்தால், கண்ட்ரோல் பேனல் சென்று அதனை நீக்கவும்.

அதற்கான ட்ரைவர் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை முழுமையாக நீக்கவும். நீக்கிவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் வழக்கம்போல இயங்கத் தொடங்கினால், அந்த சாதனத்தின் ட்ரைவர் பைலுக்கும், விண்டோஸ் இயக்க பைலுக்கும் பிரச்னை உள்ளது என்று அறிய கிடைக்கும்.

இதே போல ஏதேனும் கேம்ஸ் இன்ஸ்டால் செய்திருந்தாலும், நீக்கிப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் Add/Remove Programs மூலம் நீக்கலாம். பிரச்னை புதிதாக இணைக்கப்பட்ட சாதனம் அல்லது சாப்ட்வேர் மூலம் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி ஏதோ ஓர் இடத்தில் கெட்டுப் போயிருக்கலாம்.

ரீ பூட் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரி தானே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ரெஜிஸ்ட்ரி பைலை அண்மைக் காலத்தில் பேக் அப் செய்து வைத்திருந்தால், அதனை, இந்த ரெஜிஸ்ட்ரி பைல் உள்ள இடத்தில் காப்பி செய்து இயக்கலாம். இல்லையேல் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதனைத் தவிர வேறு வழியில்லை.

கோப்புகளை இழக்காமல் FAT 32 வில் இருந்து NTFS க்கு மாற்ற?

FAT 32  மற்றும் NTFS என்ற இரண்டும் விண்டோஸ் நிறுவுதல் மற்றும் பிரித்தலின் வகைகள் ஆகும் . NTFS பிரித்தல் என்பது FAT 32 பிரித்தலை விட பாதுகாப்பனதாக கருதப்படுகிறது . NTFS அதிகம் பயன்படுத்தப்படும் பிரித்தலாகவும் இருக்கிறது.


FAT 32 வில் இருந்து NTFS க்கு மாற்ற

  1.  உங்கள் கணினியில் command prompt  க்கு செல்லவும் (START -->RUN -->டைப் CMD -->ENTER ) .
  2. பின்வருமாறு டைப் செய்யவும் ( CONVERT C:/FS:NTFS ) இங்கு C என்பது உங்களின் டிரைவ் . அடைப்புக்குள் உள்ளது மட்டும் டைப் செய்யவும்.
  3. உங்களுக்கான volume பெயரை டைப் செய்யவும் .
இப்பொழுது உங்களின் டிரைவ் FAT 32 வில் இருந்து NTFS க்கு மாறி இருக்கும் .



குறிப்பு : command prompt யில் குறிப்பிட்ட  DRIVE ல் இருந்து உங்களின் கோப்புகளை இழக்காமல் FAT 32 வில் இருந்து NTFS க்கு மாற்றி தந்து விடும்

உங்கள் கம்ப்யூட்டரில் “NTLDR missing, press ctrl + alt + delete to Restart” என்று வந்தால்....




உங்கள் கம்ப்யூட்டரை Start செய்யும் போது "NTLDR missing, press ctrl+alt+delete to Restart” என்று வந்தால் என்ன செய்வீர்கள்?


NTLDR என்பது New Technology loader என்பதாகும். கம்ப்யூட்டர் Start ஆகும்போது BIOS ஆனது Harddrive ன் Active Partition MBR க்கான முதலாவது Sector ஜ Read செய்யும் பின்புதான் மற்ற Os பகுதிகள் Loading ஆகும். MBR ஆனது NTLDR ற்கு point செய்யப்பட்டுள்ளது. ஆகவேதான் NTLDR , Ntdetect.com போன்ற பூட்டிங் பைல்களில் ஏதாவது பிழை ஏற்படும் போதுதான் மேற்கூறிய Error message வருகிறது.


இப்படி பிரச்சனை வரும்போது விண்டோஸை புதிதாக நிறுவாதீர்கள் ஏனெனில் இப்படிச் செய்தால் நீங்கள் "My document" ல் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து பைல்களும் அளிந்துவிடும். இந்தப் பிரச்சனைக்கு சிறந்த வளியொன்று உள்ளது.


•முதலில் கம்ப்யூட்டரை "Restart" செய்யுங்கள்

•பின்பு கம்ப்யூட்டரை 'விண்டோஸ் CD' மூலம் பூட்டிங் செய்யுங்கள்
•சிறிது நேரத்தில் Taskbar , Enter=Continue , R=Rapier , F3=Quit போன்றவற்றைக்
கொண்ட திரை தோன்றும்
•அப்போது 'R' என்பதை அளுத்துங்கள் பின்பு
•1 Windows என்பதும் அதற்குக்கீழ் Which windows installation would you like to log onto (to cancel, press Enter)? காணப்படும் இதில் 1 ஜ அளுத்துங்கள்.
•பின்பு உங்கள் “Administrator” பாஸ்வேடைக் கொடுத்து “Log on” செய்யுங்கள்.
•இனி C:\Windows> என்பதில் கீழுள்ள Code ஜ Type செய்யுங்கள்

Copy E:\I386\NTLDR C:\

Copy E:\I386\NTDETECT.COM C:\

என்று Type செய்து Enter செய்தால் சரி.


இனி Exit எனறு Type செய்தால் இதை விட்டு வெளியேறலாம். அல்லது 'Restart' செய்யுங்கள். இப்போது உங்கள் பிரச்சனை சரியாகிவிடும்.


குறிப்பு : இங்கு C என்பது “CD Rom Drive” ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் CD Rom Drive ஆக எது உள்ளதோ அதைக் கொடுத்தால் சரி.


குறிப்பு : இங்கு E என்பது எனது கம்ப்யூட்டரில் விண்டோஸ் install செய்துள்ள Drive ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் எந்த Drive ல் விண்டோஸ் install செய்துள்ளீர்களோ அதைக் கொடுத்தால் சரி.


இந்த இரண்டையும் சரியாகக் கொடுப்பது மிகவும் அவசியம்.


நன்றி : மேனன்

விண்டோஸ் பழுதுபார்ப்பு!

             விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் உபயோகிப்பவர்கள் அவ்வப்போது, தங்களது கணினி பூட் ஆகும் பொழுது, விண்டோஸ் லோடு ஆகும் திரை வந்த பிறகு, உடனடியாக ரீஸ்டார்ட்  ஆகும் பிரச்சனையை சந்தித்து இருக்கலாம். 


இப்படி முதல் முறை ரீஸ்டார்ட்  ஆகி மறுபடி பூட் ஆகும் பொழுது Safe mode ஆப்ஷனோடு திரை வந்திருக்கும். 
இதில் Safe mode இல் சென்றாலும், Last known Good Configuration -இல் சென்றாலும், இதே போன்று தொடர்ந்து ரீஸ்டார்ட் ஆகிக் கொண்டிருக்கும், உள்ளே இருக்கும் உங்களது முக்கியமான டேட்டாக்கள் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை.  சரி, விண்டோஸ் சீடியை வைத்து பூட் செய்து இந்த இயங்குதளத்தின் மேலேயே over write செய்து விடலாம் என்று முயலும் போது, அங்கேயும் ஆப்பு காத்திருக்கும்.  விண்டோஸ் சீடியில் பூட் செய்து முதலாவது Repair ஆப்ஷனை தவிர்த்து  Agreement பக்கத்திற்கு அடுத்து வரும் திரையில் கீழே உள்ளது போல உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷன் காண்பிக்கப்பட்டால் 'R' கீயை அழுத்தி ரிப்பேர் செய்து கொள்ளலாம்.

 ஆனால், விண்டோஸ் ரிப்பேர் வசதியில் செல்லும் போது உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனை Unknown partition என்றோ அல்லது விண்டோஸ் ஏற்கனவே நிறுவப்படாத மற்ற பார்ட்டிஷன்களை போலவே உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனும் பட்டியலிடப்பட்டிருக்கும். இது போன்ற நிலை வரும்பொழுது சற்று சிக்கல்தான்.  முதலாவதாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இந்த நிலைக்கு முந்தைய வரலாறு (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!..) அதாவது இந்த ரீஸ்டார்ட் பிரச்சனை வருவதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது? முழுவதுமாக ஷட் டவுன் ஆவதற்கு முன்பாக பவரை அனைத்து விட்டீர்களா? அல்லது கரண்டு போய்விட்டதா? யாராவது Reset பட்டனை அழுத்திவிட்டு போய் விட்டார்களா? அல்லது இதில் ஏதுமில்லையா?  
       இந்த கேள்வியெல்லாம் எதற்கு? என்றால், இது போன்ற ரீ ஸ்டார்ட் பிரச்சனை பெரும்பாலும் பூட் பார்ட்டிஷனில் கோப்புகள் கிராஸ் லிங்க் ஆகிவிடவதால் ஏற்படுபவை, அல்லது (மிக அரிதாக) உங்கள் வன்தட்டிற்கு வயதாகி கொண்டிருக்கிறது அல்லது (மிகமிக அரிதாக) பிராசசர் ஃபேனில் தூசி அதிகம் படிந்து, ஃ பேனின் வேகம் குறைந்தது  என்றும் கொள்ளலாம். கிராஸ் லிங்க் ஆவதற்கு முக்கிய காரணம் முறையாக ஷட் டவுன் செய்யாமலிருப்பது.

        இந்த பிரச்சனை வரும் பொழுது எடுத்தவுடனே விண்டோஸ் Over write செய்து விடலாம் அல்லது புதிதாக வேறு ட்ரைவில் நிறுவிவிடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு முன்பாக, விண்டோசின் தாத்தா DOS கருவியான Chkdsk ஐ பயன்படுத்தி இந்த பிரச்னைக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம். விண்டோஸ் பூட் சீடியை வைத்து உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். பிறகு முதலாவதாக வரும் Repair திரையில் 'R' கீயை அழுத்தி Recovery Console திரைக்கு வந்து விடுங்கள்.
     
இந்த பிரச்சனை உள்ள கணினிகளில், விண்டோஸ் பார்ட்டிஷன் உள்ள ட்ரைவை குறிப்பிடும்படி கேட்காது. தேர்வு செய்ய சொல்லி வந்தால் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து, C:\> ப்ரோம்ப்டில் CHKDSK /R கட்டளை கொடுக்கலாம். ஒரு சில சமயங்களில் இந்த கட்டளை இயங்காமல் போனால், CD/DVD   ட்ரைவிற்கு   சென்று (உதாரணமாக g:) அங்கு CD\i386 கட்டளை கொடுத்து அந்த டைரக்டரிக்கு சென்று அங்கு CHKDSK கட்டளையை கொடுங்கள்.

இது முடிந்த உடன் Exit கொடுத்து கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது. கிராஸ் லிங்க ஆன சிஸ்டம் கோப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, கணினி முன்பு போல இயங்கும்.  பெரும்பாலான கணினிகளில் இந்த வழியை பயன்படுத்தி விண்டோஸ் எக்ஸ்பி ரீ ஸ்டார்ட் பிரச்சனையை சரி செய்யப் பட்டுள்ளது.