Saturday, August 18, 2012

வாங்காத லேப்டாப்க்கு பணம் கேட்பதா? தனியார் வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம்


புதுடெல்லி: வாங்காத கம்ப்யூட்டருக்காக வாடிக்கையாளரிடம் பணம் கட்டச் சொல்லி மிரட்டிய எச்டிஎப்சி வங்கி, ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:டெல்லியை சேர்ந்தவர் கெம்சந்த் மிஸ்ரா. அவரது கிரெடிட் கார்டு எண்ணை தெரிந்து கொண்ட ஒருவர், டெல்லியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் கடைக்கு சென்றார். அங்குள்ள ஒரு லேப்டாப்பை விலை பேசினார். ரூ.46,490 மதிப்புள்ள அந்த லேப்டாப்பை வாங்கி கொண்டு அதற்காக தனது கிரெடிட் கார்டு எண்ணை கூறி, அதில் பதிவு செய்து பணம் பெற்றுக் கொள்ளும்படி கூறினார். அவரிடம் கார்டு இல்லாததால் கம்ப்யூட்டரை விற்க அந்த கடை அதிபர் மறுத்து விட்டார்.இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து கெம்சந்த் மிஸ்ராவுக்கு எச்டிஎப்சி வங்கியில் இருந்து போன் வந்தது. அதில் பேசியவர், ‘ரூ.46.490க்கு ஒரு லேப்டாப் வாங்கியுள்ளீர்கள். அதற்கான பணத்தை கட்டுங்கள்’ என்று கூறினார். உடனே அதற்கு மிஸ்ரா மறுப்பு தெரிவித்தார். ஆனால் அதை நம்பாமல் அடிக்கடி போன் செய்து மிஸ்ராவுக்கு வங்கி தொல்லை கொடுத்தது.

அத்துடன் கலெக்ஷன் ஏஜென்ட்களை அனுப் பியும் மிரட்டியது.இதையடுத்து எச்டிஎப்சி வங்கி மீது டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் மிஸ்ரா வழக்கு தொடர்ந் தார். வழக்கை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சி.கே.சவுத்ரி விசரித்து அளித்த தீர்ப்பு வருமாறு: கம்ப்யூட்டர் கடையில் லேப்டாப் வாங்கவில்லை என்று மிஸ்ரா பலமுறை கூறியும் கேட்காமல் மிஸ்ரா மீது ஏஜென்ட்களை வங்கி ஏவி விட்டுள்ளது. கம்ப்யூட்டர் கடையின் சார்பில் குறிப்பிட்ட வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டுக்கு கடையில் இருந்து எந்த லேப்டாப்பும் விற்கவில்லை என்று எழுத்து மூலமாக உறுதியளிக்கப்பட்டது. 

அதேபோல வங்கியில் இருந்து கம்ப்யூட்டர் கடைக்கு பணமும் அனுப்பவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்க வாடிக்கை யாளர் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டியதும் ஏஜெ ன்ட்களை அனுப்பியதும் வங்கி செய்த மன்னிக்க முடியாத தவறு. எனவே மிஸ்ராவுக்கு எச்டிஎப்சி வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. இந்த தவறிர்கான முக்கிய காரணம் எதுவேன்றுதான் புரியவில்லை. ஒரு வங்கி நிச்சயம் ஏமாற்றினால் அவர்களது பெயர் கெட்டுவிடும் என்பது அவர்களுக்கு தெரியும். டெக்னிக்கல் ரீதியாக நிறைய குறைகள் உள்ளன.

    ReplyDelete

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : இராஜா